தங்கலான் பட நடிகைகள் குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது விக்ரம் அவர்கள் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
தங்கலான் படம்:
மேலும், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் தங்கலான் படக்குழு பிரத்யோக சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்கள். அதில் பா. ரஞ்சித், தங்கலான் படத்தை பொருத்தவரை நான் சரியாகவே பிளான் பண்ணவில்லை.
https://www.youtube.com/watch?v=8TIDIXjJO5U
பார்வதி திருவோத்து குறித்து சொன்னது:
பார்வதி அவர்கள் இந்த படத்தில் கங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூ படத்திலிருந்து அவரை நான் கவனித்து வருகிறேன். அவருடைய படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இந்த கங்கம்மா கதாபாத்திரத்துக்கு பார்வதி அல்லது ராதிகா ஆப்தேவை மனதில் வைத்திருந்தேன். பார்வதி இந்த படத்திற்குள் வந்த பிறகு நிறைய கேள்விகளை கேட்டார். எனக்கு விளக்கம் கொடுப்பது பிடிக்காது. ஆனால், பார்வதி நிறைய சந்தேகங்கள் கேட்டுக் கொண்டிருப்பார். அதனால் எங்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் வரும்.

மாளவிகா மோகனன் குறித்து சொன்னது:
அதேபோல் ஆர்த்தி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் சரியாக இருப்பார் என்று நினைத்தேன். டெஸ்ட் லுக்கும் கரெக்டாக வந்தது. முதல் நாள் சூட்டிங்கில் ஒரு காட்சியை எடுத்தோம். கையில் கம்பை வைத்துக்கொண்டு அவர் சுத்த வேண்டும். ஆனால், அவருக்கு சுத்தமாகவே அது வரவில்லை. இதனால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் செட்டாகுவாரா? என்ற கேள்வி எனக்கு வந்தது. இது குறித்து நான் விக்ரம் இடமும் பேசியிருந்தேன். மூன்று நாள் அந்த காட்சியை எடுத்தோம். இருந்தும் அவரால் அந்த காட்சி சரியாக நடிக்க முடியவில்லை.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா:
இருந்தாலுமே, மாளவிகா விடாமுயற்சியுடன் தான் செய்தார். மேலும், அவர் ஸ்டன்ட் காட்சிகளில் ரொம்பவே கஷ்டப்பட்டார். ஒரு கட்டத்தில் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் அழுது விட்டார். இருந்தும் விடாமல் விடாமுயற்சியுடன் நடித்தார். நானும் அவரிடம் ஏன் கொடூரமாக நடந்து கொண்டேன்? என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு மாளவிகா மோகனன் முறையான சிலம்பம் பயிற்சி எடுத்துக் கொண்டு பிசிக்கலாக டிரெய்ன் ஆன பிறகு தான் சூட்டிங் வந்தார். அதற்குப் பிறகு அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்று கூறி இருக்கிறார்.






