பாட்டி சொல்லை தட்டாதே சூப்பர் கார் யாருடையது , இப்போ யார்கிட்ட இருக்கு தெரியுமா ?

0
1892

1988ஆம் ஆண்டு பாண்டியராஜன் மற்றும் அவருக்கு பாட்டிய மனோரமா மற்றும் பலர் நடித்து வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் ‘பாட்டி சொல்லை தட்டாதே’. இந்த படம் அப்போது தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாத அளவில் வித்யாசமான காமெடியுடன் வந்தது. இதனால் அப்போது பெரிதும் பேசப்பட்ட படம் இது.
இதற்கு காரணம், அந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் அந்த பீட்டில் ரக சூப்பர் கார் தான். அந்த கார் பல மேஜிக் வேலைகளை செய்யும் இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் கொண்டாடப்பட்டது.

இந்த படத்தை இயக்குனர் ராஜ சேகர் இயக்கியுள்ளார். ஏ.வி.எம் ப்ரொடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஒரு முழு நீள காமெடி படத்தை ஏ.வி.எம் தேடியபோது. இந்த கதை அவர்களின் கண்ணில் பட, படத்தை தயாரித்துவிட்டனர்.
மேலும், இந்த காரை தனியாக பிரித்து ஓட்ட, முன் பாதியில் கார் எஞ்சின் பின் பாதியில் ஆட்டோ எஞ்சின் என வைத்து மாஸ் செய்துள்ளனர். இந்த கார், ஒக்ஸ்வேகன் பீட்டில் ரக கார் ஆகும்.இந்த காரை, ஏ.வி.எம் இன் பேரன் குகன் தான் தற்போது வைத்துள்ளார்.