விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல்.இருப்பினும் அடுத்தடுத்து புதிய சீரியல்களை விஜய் டிவி துவங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் பாவம் கணேசன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பானது.
kpy புகழ் நவீன் இந்த தொடரில் நாயகனாக அறிமுகமானார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக யமுனா என்ற கதாபாத்திரத்தில் ஷயீமா என்பவர் நடித்து வந்தார்.அதே போல இந்த தொடரில் குணவதி என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா கவுடா. கர்நாடகாவை சேர்ந்த இவர் சினிமா துறை குடும்பத்தை சார்ந்தவர் தான்.
இவரது தந்தை ஒரு மேக்கப் மேன் தான். இவர் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்பாகவே சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கணவர் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர் தானாம். அப்போதே பேப்பரில் ஐ லவ் யூ என்று எழுதி என் மீது வீசுவார். அப்போதெல்லாம் எனக்கு அவரை பிடிக்கவே பிடிக்காது ஒரு முறை பள்ளியில் நடன நிகழ்ச்சி நடந்தது.
அப்போது இவர் தான் எனக்கு ஜோடி என்றதும் நான் ஆடவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது மிகவும் சின்ன வயசு. ஆனால், போகப் போக தான் அவரை எனக்கு பிடித்தது. அதன் பின்னர் எங்களுக்கு காதல் மலர்ந்தது. நாங்கள் காதலித்த போது கூட காதலர் தினம், பிறந்தநாள் போன்ற நாட்களில் மட்டும் தான் சந்தித்து கொள்வோம் என்று கூறியுள்ளார் நேஹா.