படை தலைவன் படத்தில் கேப்டனின் ஏ.ஐ காட்சிகள் குறித்து இயக்குனர் அன்பு கூறியிருக்கும் விஷயங்கள்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வர, இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார்.

சண்முக பாண்டியன் முதன்முதலில் 'சகாப்தம்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பின்னர் 'மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து விஜயகாந்துடன் இணைந்து 'தமிழன் என்று சொல்' படத்தில் நடித்து கொண்டு இருந்தார். ஆனால், அப்படம் தேர்தல், விஜயகாந்த் மறைவு ஆகிய காரணத்தால் அப்படியே கைவிடப்பட்டது. தற்போது சண்முக பாண்டியன் 'படை தலைவன்'என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
படை தலைவன் படம்:
இப்படத்தை இயக்குனர் அன்பு இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதமே இப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ' இங்க அடிச்சா அங்க வலிக்கும்' என்ற டயலாக்குடன் தொடங்கும் இப்படத்தில் ' நீ பொட்டு வெச்ச தங்க குடம்' என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் சமீபத்தில் வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில் பயன்படுத்தப்பட்டு பயங்கர வைரலானது நாம் அறிந்ததே.

இயக்குனர் அன்பு பேட்டி:
அது மட்டுமின்றி ஏ ஐ மூலம் விஜயகாந்த் படத்தில் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் படைத்தலைவன் படத்தைக் குறித்து இயக்குனர் அன்பு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், 'லப்பர் பந்து' திரைப்படத்தோட ரிலீஸுக்கு முன்னாடியே ' பொட்டு வெச்ச தங்க குடம்' பாடலை 'படை தலைவன்' திரைப்படத்தில் பயன்படுத்திட்டோம். ஆனால், இந்த படம் வெளியாக தான் கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு. ஆனால், 'லப்பர் பந்து' படத்துக்கு முன்னாடியே நாங்க யூஸ் பண்ணிட்டோம்.
ஏ ஐ காட்சிகள் குறித்து:
ஏனென்றால், கேப்டனுக்கும் படத்தின் நாயகன் சண்முக பாண்டியனுக்கும் உள்ள உறவை காட்டுவதற்கு இந்தப் பாடல் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அதோடு இந்த படத்தில் வரும் விஜயகாந்தின் ஏ ஐ காட்சிகள் கேப்டனின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் எலமென்ட்டாக இருக்கும். மேலும், இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படம். ஆனால், கேப்டன் ரசிகர்களை இந்த படம் என்கேஜ் பண்ற மாதிரி இருக்கும். மேலும், ட்ரெய்லரில் 'எங்க அப்பா இங்க இருந்திருந்தா, உன்னுடைய உசுரை காப்பாத்துன்னு சொல்லி இருப்பார்' என்கிற டயலாக் கேப்டனின் குணத்தை சொல்லும் வகையில் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ZQ0KOnALHSg
கஸ்தூரி ராஜா நடித்திருப்பது குறித்து:
அந்த வசனம் கதைக்கு ரொம்ப தேவைப்பட்டது. இந்த சமயத்துல அந்த வசனம் எல்லாருக்குமே கனெக்ட் ஆகும் என்று வச்சோம் என்று கூறியிருக்கிறார். அதோட விஜயகாந்த் சார் ஏ.ஐல வர்றதுனால அவரைப் பற்றி ரீ கலெக்ட் பண்றதுக்காக ட்ரெய்லரில் அந்த வசனத்தை சேர்த்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த கதையை கஸ்தூரிராஜா சார் கிட்ட சொன்னோம். அவருக்கு இந்த கதை ரொம்ப பிடித்திருக்கறது என நடிக்க ஓகே சொல்லிட்டாரு என்று படை தலைவன் படம் குறித்து பகிர்ந்துள்ளார்.






