‘உன் முகத்த பாக்கலையே’- வெளியான படைத்தலைவன் படத்தின் முதல் பாடல் வீடியோ- எப்படி இருக்கு ?

0
221
- Advertisement -

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்தின் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து 2015 ஆம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் தான் விஜயகாந்த் கடைசியாக நடித்திருந்தார். இதனை அடுத்து விஜயகாந்த் -பாண்டியன் இருவரும் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் உடன் சேர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்த படம் வரலாறு கதையை மையாக வைத்து எடுக்கப்பட இருந்ததால் விஜயகாந்த் மன்னன் வேடத்தில் நடிப்பதாக இருந்தார்.

- Advertisement -

சண்முகபாண்டியன் குறித்த தகவல்:

இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கினார்கள். ஆனால், விஜயகாந்த்தினுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதாலும், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியதால் இந்த படம் பாதியில் நின்று விட்டது. சிறிய இடைவெளிக்கு பின் தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கும்கி படத்தை போல யானை சம்மந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்குகிறார்.

படைத்தலைவன் படம்:

இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் கதாபாத்திரத்தில் சத்தம் இல்லாமல் கிட்டத்தட்ட முடித்திருக்கிறார்கள். முதலில் இந்தப் படத்தின் கதையை விஜயகாந்த் தான் கேட்டிருக்கிறார். அவர்தான் ‘படைத்தலைவன்’ படத்தை எடுங்கள் நன்றாக இருக்கும் என்றெல்லாம் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தாராம். தன்னுடைய அப்பாவின் ஆசைக்காகவே இந்த படத்தை ஆக்ரோஷமாக சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

பின் விஜயகாந்த் இறந்தவுடன் சண்முக பாண்டியனுடன் படைத்தலைவன் படத்திலேயே லாரன்ஸ் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைக்க படக்குழு முடிவு எடுத்திருக்கிறது. நடிக்க விஜயகாந்த்தை படத்தில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. மேலும், இந்த படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

பாடல் வெளியீடு:

இந்த நிலையில் இப்படத்தினுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதாவது, உன் முகத்தைப் பாக்கையிலே என்ற பாடல் வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை அனன்யா பட் பாடியிருக்கிறார். இந்த பாடல் வரிகளை இளையராஜா எழுதி இருக்கிறார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இது தவிர இவர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement