நான் திமுகல சேர போறேன்னு ஆதாரம் இருக்கா ? பத்ம பிரியாவின் பழைய பதிவுகளை போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1153
padma
- Advertisement -

மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகி தி மு கவில் சேர்ந்த காரணம் குறித்து பத்மப்ரியா போட்ட ட்வீட் மிகுந்த கேலிக்கு உள்ளாகியுள்ளது. யூட்யூப் பிரபலமாக இருந்தவர் பத்ம பிரியா. அவர், 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து வீடியோ ஒன்றை அவரது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ யாரும் எதிர்பாராத வகையில் யூட்யூப்பில் ட்ரெண்டானது. லட்சக்கணக்கானோர் அந்த வீடியோ பார்த்து பகிர்ந்தனர். அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு பரவியது. அந்த வீடியோவால் இவருக்கு பா ஜ கட்சியினர் சிலரால் கொலை மிரட்டல் வர அந்த வீடியோவை நீக்கினார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு கமலின் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து அரசியல் வாதியாகவும் மாறினார். கமல் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே இவருக்கு நிர்வாக பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : இப்படி சூம்பி போன கோழி மாதிரி ஆகிட்டயேமா – ஷாலினி பாண்டேவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விளகுவதாக அறிவித் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டார் பத்மப்ரியா.

இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.

-விளம்பரம்-

நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. மகேந்திரன் மற்றும் பத்மப்பிரியா விலகியதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் வெளியேறினர்.இந்த நிலையில் மகேந்திரன் மற்றும் பத்மப்பிரியா ஆகிய இருவரும் தி மு க கட்சியில் இணைந்தனர். பத்ம பிரியா தி மு கவில் இணைந்த பின்னர் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தி மு க கட்சியில் சேர்ந்ததற்காண காரணத்தை கூறியுள்ள பத்மபிரியா, அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன். அதன்படி, மக்கள் பணி செய்ய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் @mkstalin தலைமையில், மருத்துவர் @drmahendran_r வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்.

பத்மபிரியாவின் இந்த டீவீட்டுக்கு கீழே இவர் திமுக வில் சேர்வது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பதில் அளித்த சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை ஆதாரங்களாக பலர் பகிர்ந்துவருகின்றனர் . அதில், நான் தி மு கவிலோ அதிமுகவிலோ சேர மாட்டேன். நான் குடும்ப அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார்.

Advertisement