பத்மாவதி படத்தின் சர்ச்சைக்கு இதுதான் காரணமா ? வெளிவந்த தகவல் !

0
2065
padmavathi

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் பத்மாவதி. ராணி பத்மாவதி மற்றும் அலாவுதீன் கில்ஜி ஆகியோருக்கு இடையிலான போர் பந்தம் குறித்த வரலாற்று கதையாக உருவாகி உள்ளது.

padmavati

ஆனால் பபத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் காதல் இருப்பது போல படம் தயாரிக்கப்பட்டுள்ளது எனக்கூறி ராஜ்புட் கர்னி சேனா அமைப்பினர் படத்திற்கு தடை கோரி பல்வேறு கலவரங்கள் மற்றும் வழக்குகளை நடத்தினர்.

ஆனால், படத்திற்கு தடை விதிக்க மறுத்து தீர்ப்பளித்துவிட்டது உச்ச நீதிமன்றம். இதனால் இந்தியா முழுவதும் நேற்று இந்த படம் வெளியானது. மேலும் சென்னையில் நேற்று ஒரு சிறப்பு காட்சி போடப்பட்டது.

padmavati movie

இதனை பார்த்த வட இந்தியர்கள் பலரும், சொல்லப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏதும் படத்தில் இல்லை எனவும், இதற்கு எதற்கு இவ்வளவு அக்கப்போர் எனவும் கூறினர்.