சிறு வயதில் எடுத்த தனது 14 புகைப்படங்களுக்கு தற்போது அதே போல போஸ் கொடுத்த பகல் நிலவு நடிகை சமீரா.

0
53678
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் ராஜா ராணி, சின்னத்தம்பி, மௌன ராகம் என்று சினிமா பட பெயர்களை டைட்டிலாக வைத்து ஒளிபரப்பான சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான`பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர்– சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள்.

-விளம்பரம்-

சின்னத்திரை தொடர்களில் காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் அன்வர்– சமீரா.இவர்கள் பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் லைப்பிலும் உண்மையான காதலர்கள் தான். பின் அன்வர் மற்றும் சமீரா ஜோடி இந்த சீரியலில் இருந்து திடீரென்று விளக்கினார்கள். இதற்கு காரணம் சீரியலில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பகல் நிலவு சீரியலுக்கு பிறகு சமீரா அவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்தும் அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு பின்னர் அன்வர்– சமீரா அவர்கள் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.

அதன் பின்னர் சமீராவை வேறு எந்த சீரியலிலும் காண முடியவில்லை. இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமீரா தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை சமீரா, சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போன்றே போஸ் கொடுத்து அதனை ரீ-கிரீயேட் செய்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சமீரா.

-விளம்பரம்-
Advertisement