பகல் நிலவு சௌந்தர்யாவை ஞாபகம் இருக்கா ? அவருக்கு நடந்துள்ள அவசர சிகிச்சை. (இந்த சின்ன வயசுல இப்படியா)

0
1139
pagal

பாடகியும் நடிகையுமான சௌந்தர்யா தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் என்ற பாட்டு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சிரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் இவர் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார்.

இவர் நடித்த yours shamefully ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவானது. பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்றும் வந்து உள்ளார். மேலும், பிக் பாஸ் சீசன் 3 யில் இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தனராக சென்று இருந்தார். அப்போது இவர் முகேனுடன் இணைந்து பாடிய வீடியோ பெரும் வைரலானது.

- Advertisement -

தற்போது பாடகி சௌந்தர்யா நடிகையாக வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் கூட நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு குடலில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.

இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இவருக்கு சர்ஜரி ஒன்று நடந்துள்ளது. வயிற்றில் உள்ள குடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக appendics அவசரமாக நடைபெற்றது குணமாக நாட்கள் ஆகும். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement