ஐஸ்வர்யாவை காப்பாற்ற புதிய App..! ஓட்டுக்கு பணம்.! இந்த முறை ஒரு ஓட்டுக்கு எவ்ளோ தெரியுமா.?

0
674
bigg-boss-aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா எலிமினேஷனில் இருந்து காப்பாற்றபட்டது தான் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் அமைந்த்து. அதிலும் கடந்த வாரம் நாமினேஷனில் இருந்த போட்டியாளர்களிலேயே ஐஸ்வர்யாவிற்கு தான் அதிகபடியான வாக்குகள் பதிவாகி இருந்தது என்று கமல் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

அதே போல வாக்களிப்பில் மக்களின் பங்களிப்பு குறைந்துவிட்டதால் தான் ஐஸ்வர்யாவிற்கு அதிக படியான வாக்குகள் விழுந்து சென்ராயன் வெளியேற்றபட்டார் என்றும் கூறியிருந்தார் கமல். ஐஸ்வர்யாவிற்கு தமிழ் நாட்டில் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அவரது சொந்த மண்னான பெங்காலி மாநிலத்தில் அதிகப்படியான ஆதரவுகள் இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது வந்த அதிர்ச்சி தகவலாக ஐஸ்வர்யாவை காப்பற்ற சிலர் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்க வைத்தாக ட்விட்டரில் ஆதாரத்துடன் சில செய்திகள் பரவி வருகிறது. அதில் ஐஸ்வர்யாவிற்கு வாக்களித்தால் ஒரு ஓட்டுக்கு paytm 50 ரூபாய் ரீ-சார்ஜ் கூப்பன் வழங்கபடும் என்று ஐஸ்வர்யாவின் ஆதரவாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் ஐஸ்வர்விற்கு கடந்த வாரம் வாக்களித்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Aishwaryabigg boss

மேலும், தற்போது இந்த வாரமும் ஐஸ்வர்யா நாமினேஷனில் இருப்பதால் அவரை காப்பற்ற நினைக்கும் பெங்காலியை சேர்ந்த ரசிகர்கள் சிலர் இந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு வாக்களித்தால் பெங்காலி மக்களுக்கு 200 paytm ரீ-சார்ஜ் கூப்பன் அளிக்கப்படும் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.

இதில் அதிச்சியூட்டும் விடயமாக கடந்த வாரம் 50 ரூபாய் paytm ரீ-சார்ஜ் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவித்ததும் பல்வேறு நபர்கள் தங்களுக்கு மெசேஜ் செய்ததாகவும், அதில் 255 நபர்கள் தமிழர்கள் என்றும் ஐஸ்வர்யாவின் ட்விட்டர் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளனர்.

Advertisement