கண்டுக்காத பிள்ளைகள்..! அனாதையாக மருத்துவமனையில் இறந்த நடிகை! புகைப்படம் உள்ளே

0
770
geeta-kapoor-passed-away

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியில் பழம் பெரும் நடிகையான கீதாகபூர் இன்று பரிதாபமாக உயுரிழந்தார். தனது மகன் சிகிச்சைக்கு பணம் கொடுக்காத நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது தான் மிகவும் கொடுமையான விஷயம்.

geeta-kapoor

இந்தி நடிகையான கீதாகபூர், இந்தியில் 100 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட இவரை அவரது மகன் ராஜா மும்பையில் உள்ள மருத்துவமணையில் அனுமதித்தார். அதன் பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டு திரும்பி வரவே இல்லை.

ஒரு வருடமாக தன் மகன் திரும்ப வராததால் தனக்கு மருத்துவமனையில் பணம் கட்ட கூட ஆளில்லை என்று ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தயாரிப்பாளர் அசோக் அவருக்கு உதவிக்கரம் நீட்டி கவனித்து வந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை இன்று மோசமானதால் அவரது உயிர் பிரிந்தது.

geeta kapoor

geeta-kapoor

actres geetha kapoor

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அசோக் “கீதாவின் உடலருகே நிற்கிறேன். அவரை நலமாக வைத்திருக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் தனது மகன் மற்றும் மகளுக்காக காத்திருந்தது அவரை நாளுக்கு நாள் பலவீனமடைய செய்தது” என்று தெரிவித்துள்ளார்.