எல்லையில் ஊடுருவ பார்த்த பாகிஸ்தானின் உளவு விமானம்.! தகர்த்தெறிந்த இந்திய சிங்கங்கள்.!

0
863
Pakistan
- Advertisement -

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஸ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் இரண்டு தமிழக வீரர்களும் அடக்கம்.

-விளம்பரம்-

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது.

- Advertisement -

காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்திய நாட்டிற்குள் வேவு பார்க்க அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் Drone எனப்படும் சிறிய வகை உளவு விமானத்தையும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் தகர்த்துள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள்.

Advertisement