நடிகை தமன்னாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் விரைவில் திருமணமா?

0
3194
- Advertisement -

சினிமா துறையில் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். மொஹமத் அசாருதீன், யுவராஜ் சிங், விராட் கோலி போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட நடிகைகளை திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான தமன்னாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துகொள்ள போவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி ‘படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா.

-விளம்பரம்-

ஆனால், அதற்கு முன்பாகவே 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமாகியிருந்தார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தமன்னா, ஹிந்தி சினிமா விடும் ஒரு அலட்சியமான நடிகையாக விளங்கி வருகிறார் .இடைப்பட்ட காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகை தமன்னாவிற்கு, பாகுபலி திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் மீண்டும் தனது இழந்த மார்க்கெட்டை பிடித்தார் தமன்னா. அதேபோல சினிமா நடிகர்களுடன் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் நடிகை தமன்னா சிக்கி வில்லை என்றாலும் , கடந்த 2012 ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் நடிகை தமன்னா காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

ஆனால், சமீபத்தில் அதனை மறுத்த நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக்கை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற வதந்தி கிளம்பியுள்ளது. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்னர் நகை விளம்பரத்திற்காக அப்துல் ரசாக்வுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement