விஜய் சேதுபதிக்கு தம்பி, ‘கயல்’ ஆனந்திக்கு ஜோடி!” – ‘விவசாயி’ பக்கோடா பாண்டி

0
3322
Pakoda Pandi

பக்கோடா பாண்டி. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க’ படத்தில் சிறுவனாக அறிமுகமானவர். இவர் தற்போது தன் பெயரை தமிழ் என மாற்றிக்கொண்டு ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதில் இவருக்கு ஜோடி ‘கயல்’ ஆனந்தி. குழந்தை நட்சத்திரம் ஹீரோ பயணத்தை கலகலப்பாக பகிர்ந்துகொள்கிறார் பாண்டி என்கிற தமிழ்.
pakoda pandiபுதுக்கோட்டை பக்கம் பனையப்பட்டிதான் என் ஊர். அப்பா ஒரு விவசாயி. எங்களுக்கு சொந்தமா ஒரு பரோட்டா கடை இருக்கு. ஸ்கூல் முடிஞ்சதும் நேரா கடைக்குப்போய் அப்பாகூட சேர்ந்து நானும் பரோட்டா போடுவேன். இப்படி போயிட்டு இருந்த சமயத்தில், ஒருமுறை இயக்குநர் பாண்டிராஜ் சார் எங்க ஸ்கூலுக்கு வந்தார்

ஏதோ ஒரு புத்தகத்தை விற்க வந்திருக்கிறதா சொல்லித்தான் பாண்டிராஜ் சார் அப்ப ஸ்கூலுக்கு வந்தார். எல்லா குழந்தைகளையும் பார்த்து போட்டோ எடுத்துக்கிட்டார். அப்ப அவரைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம். ‘என்னடா கூட்டமா இருக்கேனு, நானும் போய் நின்னு வேடிக்கை பார்த்தேன். அப்ப என்னையும் ஒரு போட்டோ எடுத்துகிட்டார். அவர் தன் படத்தில் நடிக்க ஸ்கூல் பசங்களை தேடிட்டு இருந்த விஷயம் அப்ப எனக்கு தெரியாது. பிறகு இரண்டு நாள் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்த பாண்டி சார் என் அம்மாட்ட பேசினார். என் நல்ல நேரம் நான் சினிமாவுல நடிக்க அம்மாவும் ஒப்புக்கிட்டாங்க.
Pakoda pandi பசங்க’ பட ஷூட்டிங் புதுக்கோட்டை பக்கத்துலதான் நடந்துச்சு.அந்தப் படத்தில் ‘ஜீவாவுக்கு கோபம் வந்துருச்சு’னு நான் பேசின ஒரு டயலாக் பயங்கர ஃபேமஸ்.‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’னு தொடர்ந்து பாண்டிராஜ் சார் தன் மூன்று படங்கள்லயும் என்னை நடிக்கவெச்சார். ‘பசங்க-2’வுலயும் ஒரு காட்சியில நடிக்கவெச்சார்.

அந்த சமயத்துலதான் சாரின் உதவி இயக்குநர் வள்ளிகாந்த் சார் எனக்கு அறிமுகம். அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி. எப்ப எந்த உதவின்னாலும் செய்வார். பிறகு விஜய் மில்டன் அண்ணாவின் ‘கோலி சோடா’ படத்தில் நடிச்சேன்.
pakoda pandi - Anandhi எல்லாரும், ‘ஆனந்தியுடன் நடிச்சாச்சு. அடுத்த ஹீரோயின் யார்’னு கேக்குறாங்க. ‘சத்தியமாக எந்த ஆசையும் இல்லை. என் கேரக்டரை மட்டும் நல்லா நடிச்சிட்டா போதும். மத்தபடி எனக்கு விஜய் சேதுபதி அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். அவரோட தம்பியா நடிக்க வாய்ப்பு வந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்