நம்ம பழைய ஜோக்கு தங்க துரையின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துளீர்களா ?

0
17545
palaya-jokeu-thangadurai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் ‘கலக்கப்போவது யாரு’. தங்கதுரையின் சொந்த ஊர் சென்னை தான். இவர் கல்லுரியில் படிக்கும்போதே மிமிக்கிரி, ஸ்டாண்டாஃப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை கொண்டு இருந்தவர். மேலும்,சின்ன சின்ன நிகழ்ச்சிகளிலும் ,கல்லூரி மேடைகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். பின் காமெடி நிகழ்ச்சிக்காக நடந்த ஆடிஷனில் தன் நண்பர்களின் உதவினால் பங்கேற்று நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் தேர்வு ஆனார். இவர் பயோ டெக்னாலஜி படித்து இருந்தாலும் கலைத் துறையின் மீது அதிக ஆர்வம் உடையவர். இவரை முதலில் நண்பர்கள் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்கள். காரணம் பார்த்தா, அவங்க குடும்பமே புளியந்தோப்பு பக்கத்துல தான் இருந்தாங்க.

-விளம்பரம்-
Image result for palaya jokku thangadurai

மேலும், இந்த கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் தான் நம்ம “பழைய ஜோக் தங்கதுரை”. இவரை எல்லாரும் பழைய ஜோக் தங்கதுரை என்று தான் அனைவரும் கூப்பிடுவார்கள். ஏன்னா, அவர் சொல்ற ஜோக்குகளும் எல்லாம் பழசாகவும், போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும். அதிலும்,அவர் சொன்ன ‘புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே’ என்ற சொன்ன ஜோக் வேற லெவல்ல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும், இந்த ஜோக் தான் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டி பறக்கிறது என்று கூட சொல்லலாம். இதன் மூலம் தான் தங்கதுரை பிரபலமானருன்னு எல்லாரும் சொல்லுவாங்க. அது மட்டும் இல்லைங்க தங்கதுரை இந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான் சினிமாத்துறையில் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அதோடு தங்கத்துரை தமிழில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும்,இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிக்கக் கூடியவர். அவர் சினிமா திரை உலகில் ‘எங்கேயும் எப்போதும், மாநகரம்,இன்று நேற்று நாளை, அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே’ போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் காமெடி நிகழ்ச்சிகளில் எல்லாம் கலக்கி வருகிறார் தங்கதுரை. அது மட்டும் இல்லைங்க விஜய் டிவியில் ஒளிபரப்பான சமீபத்தில் தான் முடிந்த ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் தங்க துரையும் அவருடைய மனைவியும் கலந்து கொண்டார்கள்.

Image result for palaya jokku thangadurai

சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் தங்கதுரை,அருணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், தங்கதுரை தன்னுடைய குழந்தை சம்பந்தமாக எந்த ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளிவிடவில்லை. மேலும்,எந்த நிகழ்ச்சியில் கூட காண்பிக்கவில்லை. தற்போது அவருடைய குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது. இந்த புகைப்படத்தை விஜய் டெலிவிஷன் வெளியிட்டுள்ளார்கள். மேலும், தங்கதுரையின் குழந்தை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நம்ம பழைய ஜோக் தங்கதுரையின் பையனா!என ஆச்சிரியத்தில் உள்ளனர். தற்போது இவர் சினிமா துறையில் கால் தடம் பதித்து வருகிறார்.அதோடு சிவகார்த்திகேயனனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் மேலும்,சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கதுரையும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement