மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து போல படமா..? படத்தின் பெயர் பாத்தா சிரிப்பிங்க

0
1031

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் இரட்டை மொழி வசனத்தில், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதே அளவிற்கு இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பும், கண்டனமும் இன்னும் வலுத்து வருகிறது.

Iruttu Araiyil Murattu Kuththu

இளசுகள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த கால சமூகத்திற்கு ஒரு கேவலமான உதாரணமாக தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்த ஹாசினி மற்றும் நந்தினி இருவரையும் நீங்கல்லாம் எல்லாம் பெண்ணே எல்லை என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை போலவே தமிழில் மீண்டும் ஒரு படம் விரைவில் வெளியாக இருக்கிறது. யூடூப்பில் பிரபலமடைந்த டெம்பில் மங்கீஸ் இயக்குனர் விஜய் வரதராஜன் “பள்ளு படாம பாத்துக்கோ” என்ற படத்தை இயக்கிவருகிறார். அட்டகத்தி தினேஷ் நடிக்கும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி அவருக்கு ஜோடியா நடிக்கவிருக்கிறார்.

pallu-padama-paathukka-movie

இந்த படத்தை “ஹர ஹர மகாதேவ்கி ” மற்றும் “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படத்தை தயாரித்த கே இ.ஞானவேல் ராஜாவின், ப்ளூ கோஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் “அவள்” மற்றும் “ஜில் ஜங் ஜக்” போன்ற படங்களில் ஒளிப்பதிவளராக இருந்த ஷ்ரயாஸ் கிருஷ்ணா இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.