பாண்டவர் இல்லம் தொடரில் இருந்து மதுமிதா (தேன்மொழி) விலக காரணம் இந்த பிரச்சனை தானாம் – சக நடிகரே சொன்ன உண்மை

0
1634
pandavar
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான். அதற்குப்பிறகு தான் பிற சேனல்களும் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளும் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடர் 2019ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம் ஆகும். இந்த தொடர் மதியம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடிக்கிறார்கள். அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடராக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பாண்டவர் இல்லம் ஐந்து மருமகள்களும் எப்படி அந்த குடும்பத்தை பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்?

- Advertisement -

பாண்டவர் இல்லம் தொடர் பற்றிய தகவல்:

பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் சீரியலின் கதை. தற்போது பல திருப்பங்களுடன் தொடர் சென்று சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பாண்டவர் இல்லம் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இருந்து தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் கயலுக்கு தங்கையாகவும், அழகு சுந்தரத்துக்கு மனைவியாகவும் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை மதுமிதா.

பாண்டவர் இல்லம் தொடரில் கடைசி மருமகள்:

இதற்கு முன்பே தேன்மொழி கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்து இருந்தார். சில காரணங்களால் அவர் விலகி இருந்தார். அதற்குப் பிறகு தான் மதுமிதா நடிக்க வந்தார். நடிகை மதுமிதா இதற்கு முன்பு மகராசி, அரண்மனை கிளி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் பாண்டவர் இல்லத்தில் மதுமிதா தான் கடைசி மருமகளாக நடித்து இருந்தார். சமீபத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை காண்பித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

தேன்மொழி ரோலில் நடிக்கும் நடிகை:

இவருக்கு பதில் இவர் என்று தேன்மொழி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா என்ற நடிகை நடிக்க போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தேன்மொழியின் கதாபாத்திரம் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் இந்த குழப்பத்திற்கு சீரியல் நடிகரும், பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதியின் கணவராக நடிக்கும் நேசன் நெப்போலியன் அவர்கள் தன்னுடைய சோசியல் மீடியாவில் இதற்கான காரணத்தை வீடியோ மூலம் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

மதுமிதா சீரியலில் விலக காரணம்:

உடல்நிலை பிரச்சினை காரணமாகத் தான் மதுமிதா, தேன்மொழி ரோலில் நடிக்க முடியாமல் போனது. அதேபோல் புதிதாக வந்திருக்கும் ஐஸ்வர்யா சின்னத்திரைக்கு புது வரவாக இருந்தாலும் தேன்மொழி ரோலை உள்வாங்கி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் தேன்மொழி ஆக நடிக்கும் ஐஸ்வர்யாவை பிடிக்கும் என நம்புகிறோம் என்று கூறினார். இப்படி இவர் கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து மதுமிதாவுக்கு என்னாச்சு? என்று கேட்டு ரசிகரகள் நலம் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement