அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா முத்தம் கொடுப்பேன் – ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை.

0
537
- Advertisement -

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்ட கேள்விக்கு நடிகை பாப்ரி கோஷ் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பாப்ரி கோஷ். சீரியலுக்கு வருவதற்கு முன் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் பாப்ரி கோஷ் ஆரம்பத்தில் சினிமா நடிகையாக தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இவர் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவரை தமிழில் அறிமுகம் செய்தது எஸ் ஏ சந்திரசேகர் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக பாப்ரி கோஷ் அறிமுகமானார். அந்த படத்தில் பாப்ரி கோஷ் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி நடித்து இருந்தார். அதன் பின்னர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

பாப்ரி கோஸ் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழில் ஓய், சக்க போடு போடு ராஜா, பைரவா, சர்க்கார் விஸ்வாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் எஃப் ஐஆர் படத்தில் நடித்திருக்கிறார். பின் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். அந்த வகையில் இவர் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வெற்றியடைந்த நாயகி சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

பாண்டவர் இல்லம் சீரியல்:

அதற்குப் பின் இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டவர் இல்லம். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தாத்தா மற்றும் ஐந்து பேரன்களுக்கு இடையிலான மையக் கதையை கொண்ட இந்த தொடர். இதில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் தான் பாப்ரி கோஷ். இந்த சீரியல் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பாப்ரி கோஸ் பேட்டி:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பாப்ரி கோஸ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பாப்ரி கோஸ் கூறியிருப்பது, அட்ஜஸ்ட்மென்ட் பண்ணால் தான் பட வாய்ப்பு என்று சொல்லும் நபரிடம் நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று சொல்லவே மாட்டேன்.

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சொன்னது:

என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன நபரின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள். அப்போது நான், எனக்கு பட வாய்ப்பு தரேன். ஆனால், என்னோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள் என்று கூறினார். அதனால் தான் முத்தம் கொடுத்தேன் என்று கூறுவேன். பின்னர் அந்த நபரை அவர்களின் குடும்பத்தார் நல்லா கவனித்துக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement