வறுமையால் கஷ்டப்பட்டு வந்த பில்லா 2 பட நடிகரின் தற்போதைய நிலை. அவரே வெளியிட்ட வீடியோ.

0
14597
poochi

திரை உலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். அந்த திறமையை காண்பித்து சாதனை படைக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அன்றாட வாழ்க்கையில் இருந்தே அந்த போராட்டம் என்பது துவங்கும், அதை எல்லாம் மீறி தான் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது.

fsdag

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : நான் எதாவது சொல்ல, உங்கள் தளபதி பின்னால் ஒளிந்து கொள்வீர்கள். திரௌபதி இயக்குனர் போட்ட ட்வீட்.

- Advertisement -

ஆகையால், பல துணை நடிகர்களின் நிலையும் கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘ரேனிகுண்டா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். இதில் ஜானி, சனுஷா, நிஷாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். தீப்பெட்டி கணேசன் என்பவர் இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்திருந்தார்.

இது தான் தீப்பெட்டி கணேசன் அறிமுகமான முதல் படமாம். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தல’ அஜித்தின் ‘பில்லா 2’, விஷ்ணு விஷாலின் ‘நீர்ப் பறவை’, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் தீப்பெட்டி கணேசன். கடைசியாக இவரது நடிப்பில் வெளி வந்த படம் ‘கண்ணே கலைமானே’. பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்த இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

தற்போது, ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், நடிகர் தீப்பெட்டி கணேசன் பொருளாதார ரீதியில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறாராம். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், பிரபல நடிகர்களான ஸ்ரீமன், பிரேம் குமார், பூச்சி முருகன் ஆகியோர் தீப்பெட்டி கணேசனுக்கு சில உதவிகளை செய்துள்ளனர். இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீப்பெட்டி கணேசன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

Theepetti Ganesan News in Tamil, Latest Theepetti Ganesan news ...இதையும் பாருங்க : லைக்ஸ்காக ஏன் இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க ? பிரகதியின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.

அவ்வீடியோ பதிவில் “நான் ‘கொரோனா’ பிரச்சனையால் மிகவும் பாதிப்படைந்தேன். அதை தெரிந்து கொண்ட நடிகர் பிரேம் குமார், நடிகர் பூச்சி முருகனிடம் தெரிவித்து, அவர் எனக்கு உதவி செய்தார். பிரபல நடிகர் விஷால் மற்றும் சில திரையுலக நண்பர்கள் எனக்கு வேண்டிய வீட்டுப் பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். எனக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். நடிகர் ஸ்ரீமன் எப்போது எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் கேட்க சொல்லியிருக்கிறார், அவருக்கும் நன்றி” என்று தீப்பெட்டி கணேசன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement