பாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்துள்ளது. தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் அவர் அளவிற்கு வரவேற்பு பெற்று வருகிறது கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த தொடர் 250 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்த தொடரில் மெட்டிஒலி தொடர் மூலம் பிரபலமடைந்த டெல்லி குமார் நடித்து வருகிறார். தாத்தா மற்றும் ஐந்து பேரன்களுக்கு இடையிலான மையக் கதையை கொண்ட இந்த தொடரில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தில் முக்கிய ரோலில் இருந்து வருகிறார் அவருடைய பெயர் பாப்ரி கோஷ்.
நடிகை பாப்ரி கோஷ் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ தொடரிலும் நடித்து வருகிறார். சீரியலுக்கு இவர் புதிது என்றாலும் இவர் இந்த இரண்டு தொடருக்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் பாப்ரி கோஷ், ஆரம்பத்தில் சினிமா நடிகையாக தான் அறிமுகமானார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் இவரை தமிழில் அறிமுகம் செய்தது எஸ் ஏ சந்திரசேகர் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘டூயூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி நடித்து இருந்தார். அதன் பின்னர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழில் பைரவா, சர்க்கார் விஸ்வாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் எஃப் ஐ ஆர் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வரும் இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.