பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன பாண்டவர் இல்லம் சீரியல் நடிகையிடம் மதம் குறித்து கேட்ட ரசிகர்.

0
1309
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் அவர் அளவிற்கு வரவேற்பு பெற்று வருகிறது கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த தொடர் 250 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்த தொடரில் மெட்டிஒலி தொடர் மூலம் பிரபலமடைந்த டெல்லி குமார் நடித்து வருகிறார். தாத்தா மற்றும் ஐந்து பேரன்களுக்கு இடையிலான மையக் கதையை கொண்ட இந்த தொடரில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தில் முக்கிய ரோலில் இருந்து வருகிறார் அவருடைய பெயர் பாப்ரி கோஷ்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்ருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், அக்கா நீங்க முஸ்லிமா என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பாப்ரி கோஷ், நான் இந்து தான் ஆனால், அணைத்து மதத்தையும் நான் மதிப்பேன் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : சீரியலில் இருந்து விலக அந்த இரண்டாவது Personal காரணம் இதான் – ஜெனிபர் வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

நடிகை பாப்ரி கோஷ் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ தொடரிலும் நடித்து வருகிறார். சீரியலுக்கு இவர் புதிது என்றாலும் இவர் இந்த இரண்டு தொடருக்கு முன்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் பாப்ரி கோஷ், ஆரம்பத்தில் சினிமா நடிகையாக தான் அறிமுகமானார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்காலி திரைப்படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் இவரை தமிழில் அறிமுகம் செய்தது எஸ் ஏ சந்திரசேகர் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘டூயூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதுமட்டுமில்லாமல் இவர் தமிழில் பைரவா, சர்க்கார் விஸ்வாசம் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் எஃப் ஐ ஆர் படத்திலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement