சாமியார் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா..? முடிந்தால் கண்டுபிடியுங்கள்.!

0
1533
Jackie Shroff Actor

நடிகர் தனுஷின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குனருமான கஸ்தூரி ராஜா 90 ஆம் ஆண்டில் வெளியான “என் ராசாவின் மனசிலே “, “வீரத்தாலாட்டு”, “எட்டுப்பட்டி ராசா ” போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்பை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

pandi-muni

1990 ஆம் ஆண்டுகளில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய கஸ்தூரி ராஜா, முரளி நெப்போலியன் போன்ற நடிகர்களை வைத்து நாட்டுப்புற படங்களை எடுத்துவந்தார், பின்னர் படு மாடர்னாக எடுப்பதாக எண்ணி அவரது மகன் தனுஷை வைத்து ட்ரீம்ஸ் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் படு தோல்வியை தழுவியது.

அதற்கு பின்னர் இவர் எடுத்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்கியுள்ள இயக்குனர் கஸ்தூரி ராஜா பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பை வைத்து “பாண்டி முனி” என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் நான் கடவுள் படத்தில் வரும் ஆர்யா போன்று அகோரி வேடமிட்டுள்ளார் நடிகர் ஜாக்கி ஷெராப்.

jackie-shroff

pandi muni movie

paandi muninj ackieshroff

இந்த படத்தை பற்றி கஸ்தூரி ராஜா கூறுகையில்”இந்த படம் ஒரு காட்டில் இருக்கும் பழைய ஜாமின் பங்களா ஒன்றில் நடக்கும் ஒரு பேய் கதையாக இருக்கும். மேலும் இந்த படத்தில் ஹாரர் விஷயங்களும் அதிகமாகவே இருக்கும், இந்த படத்தின் கதையை கேட்ட உடனே இந்த படத்தில் நடிக்க ஜாக்கி ஷெராப் சம்மதம் தெரிவித்து விட்டார் ” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் அகோரிய நடித்துள்ள ஜாக்கி ஷெராப்பின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.