விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்றார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைத்தார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வந்தார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்றார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் என்றார். ராஜி, கண்டிப்பாக நான் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வேன் அடம் பிடித்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லியுமே ராஜி கேட்கவில்லை.

பாண்டியன், எதுவாக இருந்தாலும் உன் முடிவு என்று கிளம்பி விட்டார். உடனே ராஜி சென்னைக்கு கிளம்பி இருந்தார். பின் கதிர்-ராஜி இருவரும் செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கதிர், ராஜியுடன் சென்னை செல்லவில்லை. கதிர் கோபத்தில் வீட்டுக்கு வந்து விட்டார். இதை அறிந்த பாண்டியன் திட்டினார். இன்னொரு பக்கம் ராஜி சென்னைக்கு சென்று காம்பிடிஷன் நடக்கும் இடத்தில் தன்னுடைய பெயரை கொடுத்து போட்டியில் கலந்து கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
டான்ஸ் போட்டியில் நடுவராக இருக்கும் ஒருவர், ராஜி உடன் சேர்ந்து நடனம் ஆட, அது பிடிக்காமல் ராஜி அங்கிருந்து வெளியே வந்து விட்டார். ராஜி என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கதிர், ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்று கேட்டார். அதற்கு ராஜி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ராஜியை நினைத்து கதிர் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலைபார்ப்பதற்காக அவருடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
அப்போது தங்கமயில், சொத்தை வித்து இரண்டு பங்காக செந்தில், கதிருக்கு கொடுக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். இதைக் கேட்டவுடன் தங்கமயில் அம்மா கோபப்பட்டு பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்த சுகன்யாவும், தங்கமயிலுக்கு சாதகமாக பேசி இருந்தார். பின் தங்கமயிலின் அம்மா, தேவையில்லாத ஐடியாவை கொடுத்தார்கள். இன்னொரு பக்கம் ராஜி, பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது போட்டியில் கலந்து கொண்ட சிலர் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜியை வேறொரு நபருடன் சேர்ந்து நடனமாட சொல்கிறார்கள். ஆனால், ராஜிக்கு விருப்பமே இல்லை. அதுவும் ஒரு கிளாமரான பாட்டுக்கு இருவரையும் ஆட சொல்கிறார்கள். ராஜி தனியாக தள்ளி போய் நிற்கிறார். இதையெல்லாம் பார்த்த அந்த நடுவர்கள் ராஜியை திட்டி நாங்கள் சொல்வது போல் தான் நீ நடனமாட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். இதனால் ராஜி வேதனையில் ரூமுக்கு சென்று விடுகிறார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், உனக்கு பணம் வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதைப் போல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு ராஜி முடியாது என்று மறுக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியனுக்கு கால் வழி என்பதால் அவரை அரசி பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் கோமதியை கோவிலுக்கு அப்பத்தா வர சொல்கிறார். பின் கோவிலில் அப்பத்தா, குமார் நிலைமையை பற்றி எடுத்து சொல்லி கேஸை வாபஸ் வாங்க சொல்கிறார். உடனே கோமதி கோபப்பட்டு தன் அம்மாவை திட்டுகிறார். இருந்தாலும் விடாமல் அப்பத்தா, குமார் கேஸை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறார். கடைசியில் ராஜி, ஹோட்டலை விட்டு கிளம்ப பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து நடுவர்கள் அங்கு வந்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






