விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில்- கதிர் இருவருமே என்ன சொல்வது என்று புரியாமல் பயந்து கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அந்த சமயம் பார்த்து பணத்தை வாங்குவதற்கு மாப்பிள்ளை அம்மா, அப்பா இருவருமே வந்தார்கள். அப்போது பாண்டியன், பணம் எங்கே? என்று கேட்டார். செந்தில்- கதிர் இருவருமே மாற்றி மாற்றி ஏதேதோ சொன்னார்கள். கோபத்தில் பாண்டியன், பணத்தை என்னதான் செய்தீர்கள்? என்று கேட்டார். உடனே மீனா, பணத்தை நான் தான் பேங்கில் இருந்து எடுத்து வந்தேன் என்று 10 லட்சம் ரூபாய் பணத்தை பாண்டியனிடம் கொடுத்தார். அந்த பணத்தை பாண்டியன் மாப்பிள்ளை வீட்டில் கொடுக்க, அவர்களுமே எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள்.

பாண்டியன், கதிரை அலைத்து பேசினார். அப்போது பாண்டியன், அரியரை எப்போது கிளியர் செய்ய போனார். இந்த கார் ஓட்டும் தொழிலை விட்டு ஒழுங்கு மரியாதையாக படி என்று திட்டினார். அதற்கு கதிர், என் வேலையை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் பாஸ் செய்து விடுவேன் என்று சொன்னார். அதற்கு பாண்டியன், இந்த கார் வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையாக மளிகை கடைக்கு வா. நீ அங்கு வாங்கும் சம்பளத்தை விட 100 ரூபாய் அதிகமாக தருகிறேன் என்று சொன்னார். ஆனால், கதிர் முடியாது என்று மறுத்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பாண்டியன், உன் அண்ணன் கடையில் நன்றாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு கதிர், அண்ணன் நன்றாக இருக்கிறாரா? என்று அவரைத்தான் கேட்கனும் என்று சொல்ல, செந்திலால் எதுவுமே பேச முடியாமல் திணறினார். அதற்குப்பின் கோமதி, எதற்காக இப்படி அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தன்னுடைய மகன்களை திட்டினார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்தில், மீனாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதார். அப்போது மீனா, இந்த பிரச்சனை எல்லாம் வரும் என்று தெரிந்துதான் நான் லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தேன். லோன் கிடைக்க தாமதம் ஆகிவிட்டது. இல்லை என்றால் முன்னாடியே பணத்தை கொடுத்திருப்பேன் என்று இருவரும் ரொம்ப எமோஷனலாக பேசினார்கள்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசொட்டில் ராஜி, கதிரை தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது ராஜி, வீடு இருந்தால் அப்பா, அம்மா கேள்வி கேட்க தான் செய்வார்கள். எதற்காக அவரிடம் நீ எதிர்த்து பேசுகிறாய்? உன்னுடைய வாழ்க்கையில் நீ என்னதான் செய்ய முடிவு எடுத்திருக்கிறாய். நான் போலீசாக வேண்டும் என்று ஒரு லட்சியத்துடன் இருக்கிறேன். நீ கடைசிவரை கார் ஓட்ட போகிறாயா? என்று கேட்டார். அதற்கு கதிர், நான் கார் ஓட்டுவது உனக்கு பிரச்சனையா? நான் இப்படியே இருக்க மாட்டேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், கடையில் செந்தில் சந்தோஷமாக இல்லை என்று சொன்னதை வைத்து பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
இதனால் செந்தில் மனமடைந்து அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அதற்கு பின் கதிர்- செந்தில் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள் . அப்போது செந்தில், நான் அப்பா பேசியதற்கு ஏதாவது பேசி இருக்கணும். கடையில் என்னை ரொம்ப மோசமாக திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பாவை சந்தித்து செந்திலுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? நம்பிக்கையானவர்களா? என்றெல்லாம் பயத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அவருமே கண்டிப்பாக இன்னும் ரெண்டு நாட்களில் வேலை கிடைத்து விடும் என்று சொன்னார்.
https://www.youtube.com/watch?v=V_TAWDPbd4M
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குமாருக்கு அரசி சாப்பாடை வைக்கும் போது குமார் தட்டை நகர்த்தி விடுகிறார். உடனே குமார், என்ன சொல்லி வளர்த்து இருக்கிறார்கள். ஒரு பிள்ளையை வளர்க்க கூட துப்பில்லை என்று பாண்டியன் குடும்பத்தை கேவலமாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட அரசி ரூமில் குமாரை அடி வெளுத்து வாங்குகிறார். அது மட்டும் இல்லாமல் வெளியே போய் தூங்கு என்று குமாரை வெளியே தள்ளுகிறார் அரசி. இதை பார்த்த குமாரின் அப்பா முறைக்கிறார்.






