விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார் வீட்டில் எல்லோருமே எவ்வளவோ கெஞ்சி கதறினார்கள். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. குமாரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள். இதை பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வேடிக்கை பார்த்தார்கள். அப்போது குமாரின் அப்பா சக்திவேல், என் மகனை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியே எடுத்து விடுவேன். அதற்குப் பிறகு உங்களை எல்லாம் கவனித்து கொள்கிறேன் என்று மிரட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் ராஜி, குமார் கைதானதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, அவருக்கு கதிர் ஆறுதல் சொன்னார்.

இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், ரொம்ப அன்பாக சரவணன், பழனி இடம் பேசினார். அதோடு அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதையும் கேட்டார். அப்போது சரவணன், கதிர் ட்ராவல்ஸ் தொடங்க லோன் வாங்கும் விஷயம் பற்றி சொன்னார். இன்னொரு பக்கம் குமாரை வெளியில் எடுக்க முடியவில்லை என்று முத்துவேல்- சக்திவேல் இருவருமே வீட்டில் சொன்னார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் ரொம்பவே கதறி அழுதார்கள். அப்போது சக்திவேல், எல்லாத்துக்கும் காரணம் அந்த பாண்டியன் குடும்பம் தான். அவர்களை பழிவாங்வேன். அவர்களை சும்மா விடமாட்டேன். அழித்தே தீருவேன் என்றெல்லாம் சபதம் போட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன், அரசியை அழைத்துக் கொண்டு மளிகை கடைக்கு போனார். அங்கு அரசியை உட்கார வைத்து கொஞ்சம் கலகலப்பாக பேசினார். அதற்குப்பின் சரவணன், அரசி இருவரும் செந்தில் வேலை செய்யும் இடத்திற்கு போனார்கள். அங்கு செந்தில் வேலை செய்வதை பார்த்து அரசி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின்அந்த இடத்திற்க்கு கதிர் வந்தார் உடனே நான்கு பேருமே சேர்ந்து வெளியே ஜாலியாக ஊர் சுற்றினார்கள். பின் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் அரசி மனமும் கொஞ்சம் மாறுகிறது.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், கோமதி இடம் கதிர் புதிதாக பிசினஸ் செய்வதை பற்றி பேசி இருந்தார். அதற்கு ராஜி, டிராவல்ஸ் தொடங்கப் போனார். பணத்திற்காக லோன் போட்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் கேரண்டி கேட்கிறார்கள் என்று நடந்ததை எல்லாவற்றையும் சொன்னார். உடனே கதிர், எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். யாரும் எதுவும் செய்ய வேண்டாம் என்று திமிராகப் பேசி இருந்தார். பாண்டியன், கதிரை திட்டிவிட்டு நாளைக்கு பேங்குக்கு நான் வருகிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசியுடன் சேர்ந்து வெளியில் சென்றதைப் பற்றி சரவணன், கதிர், செந்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் தங்கமயில் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் சொல்கிறார். குறிப்பாக, கதிருக்கு பாண்டியன் லோன் வாங்கி தரும் விஷயத்தை சொல்கிறார். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, எப்படியாவது உன் கணவனை கைக்குள் போடு. உன்னுடைய புருஷனுக்குமே நல்ல வேலை வாங்கி கொடு என்று தேவையில்லாத ஐடியா எல்லாம் கொடுக்கிறார். அதற்குப்பின் சரவணனிடம் தங்கமயில், கதிர் லோன் விஷயத்தைப் பற்றி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட சரவணன், இதில் உனக்கு என்ன பிரச்சனை. யாரிடமும் என் அப்பா கேட்க தேவையில்லை. இதெல்லாம் உன்னுடைய அம்மா கொடுத்த ஐடியாவா? என்றெல்லாம் திட்டுகிறார். தங்கமயிலால் எதுவும் பேசமுடியவில்லை. தேவை இல்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொண்டார்.
மறுநாள் காலையில் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கடுப்பாகிறது. அதற்கு பின் கதிரை அழைத்த பாண்டியன், லோன் வாங்க பேங்க்கு போகலாம் என்கிறார். உடனே கதிர், அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வதால் பாண்டியன் கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






