விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு போனார்கள். அங்கு துணி எல்லாம் எடுத்து விட்டு பில் கொடுக்க மீனா வந்தார். உடனே ராஜி தடுத்து கொடுக்கப் போனார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று தங்கமயில் வருத்தப்பட்டார். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால், செந்தில் கண்டுகொள்ளவிலை. உடனே மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.

இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆகி வீட்டில் விசாரித்து விட்டு, ராஜிக்கு போன் செய்தார். ஆனால், அவர் தெரியாது என்று சொல்லி விட்டார். இதை கதிர் இடம் சொல்லி செந்தில் ரொம்பவே பயந்தார். பின் கதிர், செந்தில் இருவரும் தேடி அலைந்து கொண்டு இருந்தார்கள். அப்போது மீனா போனை ஆன் செய்தவுடன் செந்தில் கால் செய்தார். பிறகு இருக்கும் இடத்திற்கு செந்தில் போனார். அங்கு செந்தில்-மீனா தனியாக மனதை விட்டு பேச ஒரு வழியாக அவர்களுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மேலும், கதிர், வீட்டிற்கு வரமாட்டேன். சவாரி போகணும் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்பட்டார்கள். ராஜி, கதிரை நினைத்து வருத்தப்பட்டார். கதிரை நினைத்து கோமதி ரொம்ப வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்க, அந்த சமயம் பார்த்து ராஜி வந்தவுடன் கோமதி திட்டிக் கொண்டிருந்தார். உடனே கோபப்பட்ட மீனா, ராஜி தான் கதிரை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டாளா? என்று கேட்டவுடன் கோமதி, ராஜி இருவருமே ஷாக் ஆனார்கள். இவர்கள் சொன்னதை அரசி சரியாக கேட்கவில்லை.

சீரியல் கதை:
நேற்று எபிசோடில் மீனா சொன்னதை அரசி ஒழுங்காக கேட்காததால் அப்படியே டிராக்கை வேற மாதிரி கோமதி பேசி இருந்தார். கடைசியில் ராஜுவால் தான் எல்லாம் என்பது போல் கோமதி பேச, உடனே ராஜி வருத்தப்பட்டு உள்ளே சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கதிர் வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவை பார்த்து பேச, கோமதி வேதனையில் அழுதார். அதற்கு கதிரும் ஆறுதல் சொல்லி இருந்தார். அதற்கு பின்னர் ரூமில் கதிர், ராஜிவிடம் பணத்தை கொடுக்க, எதற்கு நீங்கள் வேலைக்கு போகிறீர்கள்? உங்களால் என்னை தான் அத்தை திட்டுகிறார். நான் உங்களிடம் பணம் கேட்டேனா? என்று இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில், ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி நான் எல்லா உண்மையும் எங்கள் வீட்டில் சொல்லப்போகிறேன் என்று ராஜி தன்னுடைய அம்மா வீட்டுக்கு போகிறார். இதை கதிர் மீனாவிடம் சொல்ல மீனா- கதிர் இருவருமே ராஜிவை தடுக்க பார்க்கிறார்கள். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. பின் தன் அம்மாவிடம், அப்பா எங்கே என்று கேட்டு கிளம்புகிறார் ராஜி. பின்னாடியே கதிரும் செல்கிறார். இந்த உண்மையை எல்லாம் மீனா கோமதியிடம் சொல்ல, கோமதியும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருக்கிறார்.

கதிர்-ராஜி சண்டை:
மேலும், கதிர் எப்படியோ ராஜிவை தடுத்து நிறுத்தி எவ்வளவோ சமாதானம் செய்கிறார். கடைசியில் ராஜி, நான் போடுற கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நான் வீட்டுக்கு வருவேன். யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு கதிரும் ஒத்துக் கொள்கிறார். பின் ராஜி, என்னுடைய படிப்பு செலவிற்கு நீ எந்த காசும் கொடுக்க கூடாது. நீ வண்டி ஓட்டு என்னவேனாலும் எனக்கு பணம் வேண்டாம். நான் டியூஷன் எடுக்க போகிறேன். இதை நான் வீட்டிலும் சொல்லி விடுவேன் என்று சொன்னவுடன் கதிர் சம்மதிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






