விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி, நான் சொன்னது தான் உண்மை. என் குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைத்து தான் என்னை கல்யாணத்திற்கு முன் கடத்தி சென்று அடுத்த நாள் கொண்டு வந்து விட்டார். எனக்கு திருமணம் நடக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால், என்னுடைய அப்பா- அம்மா அசிங்கப்படக்கூடாது என்று தான் நானும் என் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு இவனும் நிம்மதி இல்லாமல் இருக்கத்தான் எனக்கு நானே தாலி கட்டிக் கொண்டு வந்தேன் என்று சொன்னார். பின் குமார், அரசி சொல்வது உண்மை என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே கோபப்பட்டார்.

இதனால் வீட்டில் உள்ள எல்லாருமே கோபப்பட்டார்கள். அதற்கு பின் அப்பத்தா இருவரையும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார். பின் கதிர், இனிமேல் என்னுடைய தங்கை அங்கு இருக்கக்கூடாது என்று ஆவேசப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அப்போது அரசி செய்த வேலையைப் பற்றி கோமதி சொன்னார். உடனே மீனா, அரசி சொன்னது தான் உண்மை என்ற உடன் மொத்த பேருமே சாக் ஆனார்கள். பின் கதிர்- செந்தில் இருவருமே குமார், அரசியை கடத்தி செல்ல வந்த விஷயத்தை சொன்னார். இதை எல்லாம் கேட்டு பாண்டியனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியானது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் அப்பத்தா, இருவருக்குமே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொன்னார். ஆனால், குமாரின் அப்பா அதெல்லாம் முடியாது. அவளை பாண்டியன் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வெளியே இருந்து கத்தினார். உடனே அரசி வெளியே வந்தார். அப்போது பாண்டியன், எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் நீ இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாயா? எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டார். அரசி, நடந்த எல்லாவற்றையும் சொல்லி தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார். உடனே குமாரும், குமாரின் அப்பாவும் பாண்டியனையும் அரசி பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட கதிர், குமாரை வெளுத்து வாங்கி இருந்தார்.

நேற்று எபிசோட் :
அதற்குப்பின் அப்பத்தா, இவர்கள் இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது என்று ஊர் நம்பிக்கொண்டிருக்கிறது. தயவு செய்து திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று சொன்னார். பாண்டியன், ஊர் உலகத்திற்காக என் மகளின் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை. திருமணமாகாமல் கடைசிவரை என் மகளாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த அயோக்கியனுக்கு என் மகளை கட்டி வைக்க மாட்டேன். அப்பா உடனே வந்துவிடு அரசி என்று சொன்னார். இதனால் அரசியுமே தன்னுடைய அப்பாவுடன் செல்ல முடிவெடுத்தார். அதற்குப்பின் அரசி தாலியை கழட்டி குமாரின் முகத்தில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசியை பாண்டியன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே அரசியை இப்படி செய்ததைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி சொல்கிறார்கள். கடைசியில் பாண்டியன், இந்த விஷயத்தை இதோடு விடுங்கள்.
இனிமேல் அரசி திருமணத்தைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று சொல்கிறார். அரசியும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு, உங்கள் மீது இருந்த பயத்தால் தான் உண்மையை சொல்ல முடியவில்லை என்கிறார். இதை கேட்டு பாண்டியன் ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் முத்துவேல், குமார் செய்த வேலைக்கு அடிக்கிறார். இதனால் கோபப்பட்ட சக்திவேல், என் மகனை எதற்காக அடிக்கிறீர்கள்? அவன் செய்தது தான் சரி.

சீரியல் ட்ராக்:
உங்கள் மகள் ஓடிப்போய் மானத்தை வாங்கி விட்டாள் என்று மீண்டும் தரகுறைவாக ராஜியை பற்றி பேசுகிறார். இதனால் கொந்தளித்த முத்துவேல், மூணு பேரை உன் மகன் கடத்திருக்கிறான். அவன் செய்வதற்கெல்லாம் நீ சப்போர்ட் செய்கிறார் என்று சொல்வதால் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது. உடனே அப்பத்தா, அவர்களை தடுத்து நிறுத்தி விடுகிறார். கடைசியில் மீனா, ராஜி, அரசி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அரசி, நான் குமாரை பழி வாங்கவும், நம்ம வீட்டின் மீது இருந்த பயத்தால் தான் அங்கு போனேன். நான் தான் அவனை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன். இப்போது அவன் ரொம்ப நிம்மதியாக இருப்பான் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






