தங்கமயிலை புகழ்ந்த பாண்டியன், கோபத்தின் உச்சத்தில் கோமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
709
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வந்ததிலிருந்து பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல இருந்தார். ஆனால், மீனா- ராஜு இருவரும் போக மறுத்து விட்டார்கள். அப்போது, சரியாக கவனிக்காமல் ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம்மை அதிக ரேட்டுக்கு புக் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

எல்லோரும் குறைவான தொகை என்று நினைத்து இருந்தார்கள். ஆனால், மீதி 21000 கட்ட வேண்டும் என்று தங்கமயிலுக்கு மெசேஜ் வந்த உடன் அதிர்ச்சியாகி தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். அதற்கு அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். கடந்த வாரம், தங்கமயில்-சரவணன் ஹனிமூன் சென்று இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம்மின் மொத்த செலவு 26000 என்று தெரிந்தது. இதை சரவணன், கதிர்-செந்தில் இடம் சொல்லி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் செந்தில் மீனாவிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். கடைசியில் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விட்டார். அதோடு கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து இருந்தார். இந்த வாரம் சரவணன்-தங்கமயில் சந்தோசமாக ஹனிமூனை கொண்டாடுகிறார்கள். கோமதியின் அம்மா வீட்டில் அவருடைய சின்ன அண்ணன் மகனை பார்க்க, பெண் வீட்டில் இருந்து வந்திருந்தார்கள். அப்போது ராஜி அம்மா கழுத்தில் மட்டும் நகை இல்லை.

சீரியல் கதை:

இதனால் வீட்டில் சண்டை வெடித்தது. இதை அறிந்த ராஜி வருத்தப்பட்டு அழுந்தார். பின் பாண்டியன் வீட்டில் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது செந்தில், சித்தப்பு இருவரும் ஆயிரம் ரூபாய்க்கு என்ன கேட்பாரோ? என்ற பயத்தில் இருக்க, உடனே கணக்கில் ஒரு ₹1000 விடுகிறது என்று சொல்ல பாண்டியன் அதிர்ச்சி ஆகி, உன் மகன் இன்னக்கி கடைக்கு வந்திருந்தான். அவன் வேலையாக தான் இருக்கும் வர சொல்லு என்று சொன்னவுடன் கதிர் வந்து நின்றார். அப்போது கதிர், நான் எடுக்கவில்லை என்கிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

கடைசியில் செந்தில், ஒருவர் குறைவாகத்தான் பணம் கொடுத்தார். அதை நான் மறந்து விட்டேன் என்று பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேச, மீனா உள்ளுக்குள்ளேயே கிண்டலடித்து சிரித்துக் இருந்தார். இன்னொரு பக்கம் தங்க மயிலின் அம்மா போன் செய்து, மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வா, நான் சொல்வதைப் போல் செய் என்று தேவையில்லாத வேலை பார்க்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

தங்கமயிலும், தன் அம்மா சொன்னது போலவே சரவணனிடம் சண்டை போட்டு வெளியே வந்து விடுகிறார். சரவணனும் என்ன செய்வது என்று புரியாமல் தூங்கி விடுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், தங்கமயில் போட்டோ அனுப்பியதை பார்த்து பாண்டியன் புகழ்ந்து அவருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இதை கேட்டு கோமதிக்கு கோபம் வருகிறது. பின் வீடியோ காலில் கோமதிக்கு போன் செய்து பாண்டியன் சமாதானம் செய்கிறார். பின் கோமதியும் வெட்கப்படுகிறார். இருவருமே ரொமான்ஸ் ஆக பேசிக் கொண்டிருப்பதை மீனா, ராஜி பார்த்து சிரிக்கிறார்கள். கோமதிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் வெட்கப்பட்டு இருக்கிறார்.

Advertisement