விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். பாண்டியனுமே செந்தில் சமையலை பாராட்டுகிறார். பின் கோமதி, மலரின் வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டார். ரொம்ப ஜாலியாக பேசி கொண்டு இருந்தார். கோமதி, மலரின் சாப்பாட்டை ரொம்பவே புகழ்ந்து பேசி இருந்தார். பின் மீனா- ராஜி இருவரும் கிளம்பி சென்றார்கள். கோமதியும் மலரின் மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீனாவை அவருடைய மாமாவே அழைத்துக் கொண்டு சென்றார். செல்லும் வழியில் எல்லாம் அவர், மீனா ஓடிப் போய் திருமணம் செய்த விஷயத்தை பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தார். எதற்காக இப்படி செய்தாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை. செம டென்ஷனில் மீனா இருந்தார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய மாமனாரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். முத்துவேல் ரொம்பவே பயப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் மலர், எல்லா வேலைகளையும் ஒடி ஒடி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருக்கிறது. மாமனார், மாமியார் இருவருமே சேர்ந்து மாற்றி மாற்றி மலருக்கு வேலை வைத்தார்கள். கோமதி, ஒருவரே எப்படி இவ்வளவு வேலை செய்ய முடியும். அவளும் பாவம் தானே என்று மலருக்கு துணையாக பேசி இருந்தார். இதை எல்லாம் பார்த்து மாமியாருக்கு கோபம் தான் வருகிறது. இருந்தாலும் அமைதியாகிக் கொண்டார். அதற்கு பின் கோமதி, மீனா, ராஜி எல்லோருமே மலருக்காக கிச்சனில் உதவி செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, வீட்டில் உள்ள எல்லா மருமகளுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த மலரின் மாமியாருக்கு கோபம் வருகிறது. இப்படி எல்லாமா சிரித்து பேசி இருப்பது என்று கேட்டார். கோமதி அதற்கு நக்கலாக பதில் சொல்கிறார். அதற்குப்பின் மலரின் மாமனார், தங்கராஜை பற்றி ரொம்ப பெருமையாகவும் பயமுறுத்துவது போலவே பேசுகிறார். கோமதியும், தங்கராஜ் ஒரு வில்லன் என்று நினைத்துக் கொள்கிறார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் கோமதி, தங்கராஜ் பற்றி விசாரித்தார். எல்லோருமே தங்கராஜ் பற்றி ரொம்பவே டெரராக சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து தங்கராஜ் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்துடன் கோமதி சிரித்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் கோமதி, நான் உங்களை நினைத்து பயந்தேன். ஆனால், நீங்கள் அப்படி இல்லை என்று வெகுளித்தனமாக பேசி விடுகிறார். அதற்குப்பின் கோமதி, ரேவதியிடம் தங்கராஜ் குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மதி- சுரேஷ் இருவரும் சரியாக பேசிக் கொள்ளாததை கோமதி கவனிக்கிறார். மலரின் மாமியார், சுரேஷ் மதியின் திருமணத்தை பற்றி எல்லாம் சொல்கிறார். பின் கோமதி, மதி- சுரேஷ் இருவருக்கும் அறிவுரை சொல்கிறார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனுக்கு வீடியோ கால் செய்து வீட்டில் உள்ள எல்லோரையுமே அறிமுகம் செய்து வைக்கிறார். வெகுளித்தனமாக கோமதி நடந்து கொள்வது பார்த்து மலரின் மாமனார் மாமியாருக்கு பிடிக்கவில்லை.






