விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கடையில் தங்கமயில், மாணிக்கம் மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கடைக்கு வந்த ஒருவர், பாண்டியனிடம் பணத்தை கொடுக்க சொல்லி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அதை வாங்கிய மாணிக்கம், உனக்கு தீபாவளி சீர் செய்ய காசு தயாராகிவிட்டது என்றார். உடனே பயத்தில் தங்கமயில், வேண்டாம். அந்த பணத்தை கொடுத்து விடுங்கள். மாமாவிடம் தந்துவிடலாம் என்றார். ஆனால், மாணிக்கம் கேட்கவே இல்லை. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் என்ன பிரச்சனை வருமோ? என்று தங்கமயில் ரொம்பவே பயந்து போய் இருந்தார்.

தங்கமயிலின் வீட்டில் இருந்து சீர் செய்வதற்காக பாண்டியன் வீட்டிற்கு வந்திருந்தார்கள். தங்க மயிலுக்கு உண்மை தெரிந்துவிடுமோ என்று பயத்திலேயே இருந்தார். பின் தங்கமயிலின் அப்பா, அம்மா இருவருமே தீபாவளி சீர் கொடுத்து விட்டு தங்கமயிலிடம் தனியாக சென்று பேச போனார்கள். அப்போது தங்கமயில், கடை காசை எடுத்து செய்வது இது நியாயமா? பயமாக இருக்கிறது என்றெல்லாம் புலம்பினார். அதற்கு தங்கமயில் அம்மா, தயவுசெய்து தீபாவளிக்கு வீட்டிற்கு வந்து விடாதீர்கள். இங்கேயே சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று தங்களுடைய குடும்ப வறுமையை சொல்லிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் குமார், என் மேல் இருக்கும் காதலால் தான் கேசை நீ வாபஸ் வாங்கி விட்டாய். உனக்காக நான் இருக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசினார். இதைக் கேட்டு கோபப்பட்ட அரசி பயங்கரமாக திட்டினார். அந்த சமயம் வந்த சரவணன், குமாரை கன்னத்திலேயே அறைந்து வார்னிங் கொடுத்தார். கடைசியில் சுகன்யாவின் அப்பா- அம்மா இருவரும் தீபாவளி சீர் கொடுப்பதற்காக பாண்டியன் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து ராஜி சோகமாக இருந்தார். பின் கோமதி, உனக்கும் எனக்கும் தான் தீபாவளி சீர் கொடுக்க குடுப்பனை இல்லை என்றெல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, தீபாவளி பலகாரங்களை செய்து கொண்டிருக்கிறார். மீனா, ராஜி, அரசி எல்லோருமே கோமதிக்கு உதவி செய்கிறார்கள். அப்போது மீனாவுக்கு போன் செய்த செந்தில்,
நீ வீட்டுக்கு இன்னும் வரவில்லையா? தீபாவளி பண்டிகையை நாம் குவாட்டர்ஸில் கொண்டாடலாம். கிளம்பி வா என்றெல்லாம் சொல்கிறார். மீனா முடியாது என்று மறுத்து விடுகிறார். இதை கவனித்த கோமதி, ஒழுங்கு மரியாதையாக வீட்டுக்கு வா செந்தில், தீபாவளி கொண்டாடலாம் என்று திட்டி வைத்து விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட பட்டாசு மலையை குவித்து வைத்திருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது பழனி, கோமதிக்கு தாய் வீட்டு சீரை கொடுக்கிறார். இதை பார்த்து கோமதி ரொம்பவே எமோஷனல் ஆகிறார். அப்போது பழனி, என்னால் நகை வாங்க முடியவில்லை என்றாலும் துணி தான் எடுக்க முடிந்தது என்று சொல்கிறார். இதை கேட்டு கோமதி, இதுவே எனக்கு பெரிய விஷயம். எனக்கு பிடித்த கலரில் எடுத்துக் கொடுத்திருக்கிறாய் என்று ரொம்ப எமோஷனலாக தன்னுடைய தம்பி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






