விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, தன்னுடைய மாமியாருக்கு தங்க வளையலை பரிசாக கொடுத்தார். அதை பார்த்து செந்திலுக்கு கடுப்பாகிறது. கோமதி ரொம்ப எமோஷனலாக அழுதார். மீனாவிற்கு வீட்டை விட்டு பிரிந்து செல்ல மனமே இல்லை. எல்லோரையும் நினைத்து கவலைப்பட்டார். அதற்குப்பின் புது வீட்டிற்கு எல்லோரும் சென்று விட்டார்கள். பால் காய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருர்கள். பாண்டியன் மட்டும் வரவில்லை.

மீனாவின் அப்பா, அம்மா வந்து விட்டார்கள். பாண்டியனை தவிர மீதி எல்லோருமே புது வீட்டுக்கு வந்து விட்டார்கள். உடனே கோமதி, பால் காய்ச்சும் வேலையை பார்க்கலாம் என்றார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வருவதால் மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். நல்லபடியாக பால் காய்ச்சி விட்டார்கள். பின் மீனா, செந்தில் இருவருமே பாண்டியன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, பாண்டியனுமே பதிலுக்கு பணத்தை தந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கிப்ட் தருகிறார்கள். ஆனால், சரவணன்- பழனி மட்டும் தரவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை பார்த்து தங்கமயில், சுகன்யாவுக்கு கஷ்டமாக இருந்தது. அப்போது சுகன்யா, ஒரு கிப்ட் வாங்க கிட்ட காசு இல்லையா? உங்க மச்சான் கிட்ட கேக்க வேண்டியது தானே என்றார். அதற்கு பழனி, நான் கேட்டேன். அவர்தான் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், நாமும் இந்த மாதிரி புது வீட்டுக்கு குடுத்தனம் போகலாமா? என்று கேட்டார். அதற்கு சரவணன், நீ படித்து பட்டம் வாங்கி வேலைக்கு போன கதை எல்லாம் வீட்டில் சொல்லு அப்புறம் போகலாம் என்று திட்டி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, மீனாவை விட்டு பிரிய மனமில்லாமல் ரொம்ப எமோஷனலாக அழுது கொண்டு அங்கிருந்து வருகிறார். மீனாவுமே எல்லாரும் கிளம்புவதை நினைத்து அழுது புலம்புகிறார். ஆனால், செந்தில் அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. அதற்குப்பின் குமார், ராஜியை பார்ப்பதற்காக டிராவல்ஸிற்கு வந்திருக்கிறார். அப்போது குமார், அப்பத்தாவிற்கு 75வது பிறந்தநாள் வருகிறது. அதற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும். அப்பாவை எதுவும் பேசவிடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். உன் வீட்டில் எல்லோருமே வந்தாலும் சந்தோஷம்தான் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு ராஜி சம்மதிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் செந்தில் வீட்டிற்கு வரவில்லை என்று மீனா போன் செய்து பேசுகிறார். ஆனால், செந்தில் நிறைய குடித்துவிட்டு போதையில் இருக்கிறார். இன்னொரு பக்கம் கோமதி, மீனாவை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்கு பாண்டியன், ஆறுதல் சொல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று சரவணன், தங்கமயில் உங்களுடன் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், சாதுரியமாக பேசி சரவணன் போட்ட பந்தை திருப்பி அவருக்கு அனுப்பி விடுகிறார். இருந்தாலுமே கோமதி, மீனாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






