விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர் ஸ்வீட் கொடுத்து டிராவல்ஸ் ஆரம்பிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதை கேட்டு கோமதி- பாண்டியன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் செந்தில், என்னுடைய அப்பா பணத்தை திருப்பி கொடுத்ததற்கு செலிப்ரேட் பண்ணலாம் என்றார். உடனே மீனா, பணத்தை கொடுக்கும் போது மாமா அதற்கு பதில் நிலத்தை வாங்கணும் என்று சொன்னாரே, அது நினைவில் இருக்கிறதா. சொந்தமாக நிலம் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்.

அப்பத்தா, அரசி எங்கே செல்கிறார்? என்று விசாரித்தார். அதற்கு சுகன்யா, காலேஜ் திறந்து விட்டது. அதனால் தான் அரசியை விட குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள் என்றார். இன்னொரு பக்கம் கல்லூரியில் பாண்டியன் அறிவுரை சொன்னார். தங்கமயில், கதிர் எல்லோருமே அரசிக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்கள். அரசி சந்தோஷமாக கல்லூரிக்கு சென்றார். இன்னொரு பக்கம் வீட்டில் செந்தில், பாண்டியன் மாறியதற்கு தான் காரணம் என்று தம்மட்டம் அடித்துக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் அரசியை பார்ப்பதற்காக குமார் கல்லூரிக்கு சென்று இருந்தார். குமாரை பார்த்து கோபத்தில் அரசி திட்டினார். அப்போது குமார், எங்கு பார்த்தாலும் உன் ஞாபகமாகத்தான் இருக்கிறது. உனக்கு செய்த துரோகம் தான் என் கண்முன் வருகிறது. அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவர நினைக்கிறேன் என்றெல்லாம் பேசினார். அதற்கு அரசி, நீ என்னை விட்டாலே அதுவே போதும். தயவு செய்து இங்கிருந்து போ என்று எல்லாம் திட்டி விட்டு சென்றார். குமார் வேதனையில் அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், தன்னுடைய டிராவல்ஸ் தொடங்கும் இடத்தை அழகாக ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். அதற்காக ராஜி, கதிர், நண்பர்கள் எல்லோருமே உதவி செய்கிறார்கள். மொத்த வீடுமே கதிர் டிராவல்ஸ் தொடங்குவதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கதிர், கடைக்கு வைத்திருக்கும் பெயரை பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால், கதிர் சர்ப்ரைஸ் என்று சொல்கிறார். மறுநாள் காலையில் மொத்த குடும்பமும் கதிர் டிராவல்ஸ் தொடங்கும் இடத்திற்கு கிளம்புகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பாண்டியன், எனக்கு வேலை இருக்கிறது வர முடியாது என்று சென்று விடுகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். பின் ட்ராவல்ஸ் திறப்பு விழாவிற்கு எல்லாரும் வந்து விடுகிறார்கள். பாண்டியன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் மொத்த குடும்பமும் டிராவல்ஸ் திறப்பு விழாவில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






