விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி-மீனா இருவருமே உண்மையை சொல்வதற்காக கிளம்பினார்கள். உடனே அரசி வேண்டாம் என்று தடுத்து, இந்த பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தியதற்கு அவன் அனுபவிப்பான் என்று அவர்களிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை துணி பேக் செய்ய சொன்னார். அவரும் சந்தோசமாக செய்தார். பின் தன் அம்மாவிடம் சரவணன் பேசப் போனார். ஆனால், அவர் அரசியைப் பற்றி கவலைப்படுவதால் சரவணன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து தங்கமயிலை அழைத்துக் கொண்டு சென்றார்.

பின் தங்கமயில் அம்மா வீட்டிற்கு சரவணன் வருகிறான். தங்கமயில், இங்கு ஏன் வந்தோம்? எதற்கு? என்று கேள்வி கேட்டார். உடனே சரவணன், இனி நீ இங்கு தான் இருக்க வேண்டும். உண்மையை சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை. பொய் மேல் பொய் சொல்லி என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ஏமாற்றுகிறாய். உன்னை மன்னிக்க மாட்டேன் என்று கோபமாக பேசினார். தங்கமயில் அப்பா- அம்மா இருவரும் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே சரவணன் கேட்கவில்லை. தங்கமயில் கதறி அழுதார். இருந்தாலும் சரவணன் மனம் இறங்காமல் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் கோமதி, பாண்டியன் நிலைமையை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதோடு தன் கணவனுக்கு துணையாக நிற்க வேண்டும் என்று மளிகை கடைக்கு போனார். பாண்டியன் வேண்டாம் என்று தடுத்துமே கோமதி கேட்கவில்லை. பின் கடைக்கு பொருள் வாங்க வந்தவர்கள் அரசி திருமணத்தைப் பற்றியே மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருப்பதால் பாண்டியன், கோமதி இருவரும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் கோமதியை பாண்டியன் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் கிச்சனில் இருக்கும் சுகன்யாவை பார்த்து மீனா ரொம்பவே கொந்தளித்தார். பின் மீனா, அரசி வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு எப்படி மனது வந்தது? குமார் சொன்னால் நீங்கள் அரசியை அனுப்பி விடுவீர்களா? என்று கேட்டார்.

நேற்று எபிசோட்:
இதையெல்லாம் கேட்டவுடன் சுகன்யா ஷாக் ஆகி ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே மீனா, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. வெளியில் சொல்லட்டுமா? என்று சொன்னவுடன் சுகன்யா உண்மையை ஒத்துக் கொண்டார். மீனா, சித்தப்பாவிற்காக தான் உங்களை நான் சும்மா விடுகிறேன். இனிமேலும் இந்த குடும்பத்திற்கு ஏதாவது துரோகம் செய்யணும் நினைத்தால் உங்களை உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்று சுகன்யாவை வெளுத்து வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் செய்ததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொல்லியுமே தங்கமயில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, மாரி இருவருமே அரசியை சாப்பிட கூப்பிட்டார்கள். அப்போது அரசி கீழே வருகிறார். அங்கு வந்த குமார், நாங்கள் இருவரும் வெளியே சாப்பிட போகிறோம். எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி அரசியை அழைத்து செல்கிறார். காரில் வரும்போது குமார், உன் மோரைக்கு சாப்பாடெல்லாம் கேட்கிறதா? என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் அரசியை இறக்கிவிடுகிறார். இங்கு ஓநாய், நரி எல்லாம் இருக்கும். இங்கே கிடந்து சாவு என்று சென்று விடுகிறார் குமார்.

சீரியல் டிராக்:
அரசிக்கு ஒன்றுமே புரியாமல் கத்தி கதறுகிறார். இன்னொரு பக்கம் குமார் தன்னுடைய நண்பர்களுடன் சந்தோசமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். குமாரை பார்த்து மாரி, அரசி எங்கே? அவளை என்ன செய்தாய்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், குமார் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப் பின் அரசி வீட்டுக்குள் வருகிறார். அரசியை பார்த்தவுடன் குமார் ஷாக் ஆகிறார். பின் அரசி, நண்பருடன் தெருவில் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அப்படியே வந்துவிட்டார் என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு குமாருக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. அதற்கு பின் அரசி, எனக்கு ஏதாவது ஆகிவிட்டது என்று பயப்படுகிறீர்களா? என்று தன்னுடைய மாமியாரிடம் கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






