விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் வீட்டிற்கு வந்த தங்கமயில் அப்பா- அம்மா, தாலி பிரித்து கோர்ப்பது பற்றி பேசி இருந்தார்கள். உடனே கோமதி, மற்ற இரண்டு மருமகளுக்குமே தாலி பிரித்து கோர்த்து விடலாம் என்று சொல்ல, பாண்டியன் சம்மதித்தார். அதன் பின் அரசி வீட்டிற்கு வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தி, அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் உள்ளே சென்று விட்டார். இதை எல்லாம் கவனித்த ராஜி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார். பின் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது.

மறுநாள் கோமதி, தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு நகைகளை எடுக்க பேங்கிற்கு போனார். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது சக்தி அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. உடனே அங்கு வந்த செந்திலை பார்த்தவுடன் சக்தி கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜியை அழைத்து அவர் செய்த சாகசத்தை பற்றி விசாரித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜி, பயத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாகவே இருந்தார். நேற்று எபிசோட்டில் பாண்டியன், நியூஸ் பேப்பரில் இருக்கும் விஷயத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஆனால், அந்த பேப்பரில் ராஜியின் முகம் சரியாக தெரியவில்லை. அவருடைய பெயருமே குறிப்பிடவில்லை. இருந்தாலும் வீட்டில் உள்ள எல்லோருமே அந்த சிங்கப்பெண் ராஜி தான் என்று கன்பார்ம் செய்தார்கள். ஆனால் ராஜி, அது நான் இல்லை என்று சமாளித்தார்.

நேற்று எபிசோட்:
குழலி மட்டும் விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டே இருந்தார். உடனே தங்கமயில், உங்கள் வீட்டில் என்ன ப்ரச்சனை? என்று கேட்க, குழலியால் எதுவும் பேச முடியவில்லை. எல்லோரும் ராஜி விசயத்தை மறந்து விற்றார்கள். ஒரு வழியாக அந்த பஞ்சாயத்தில் இருந்து ராஜி தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய நகைகளை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், நான் போலி நகைகளை போட்டு உங்களை ஏமாத்தி இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு சரவணன், எனக்கு நகை முக்கியமில்லை, நீதான் முக்கியம் என்றார். ஆனால்,பொய் சொல்லி ஏமாத்துவது தப்பு என்றார். மறுநாள் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று மருமகள்களும் அழகாக ரெடி ஆகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோமதி, தங்கமயில் நகைகளை அவரிடம் கொடுக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, ராஜியிடம் நகை இல்லை. அவளுக்கு கொஞ்சம் கொடுங்கள் என்று சொன்னதற்கு, என்னுடைய நகைகளை கொடுத்து விட்டேன் என்றார் கோமதி.
https://www.youtube.com/watch?v=zQP3ThN6W0I
சீரியல் ப்ரோமோ:
பின் மொட்டை மாடியில் மீனா-ராஜி இருவருமே போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், எங்கிட்ட இருக்கும் 40 பவுனில் எட்டு பவுன் தான் தங்கம். மீதி எல்லாமே கவரிங். இதை எடுத்து ஏன் ராஜிக்கு கொடுக்க சொல்கிறீர்கள்? அவள் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது? என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட ராஜி- மீனா, என்ன கவரிங் நகையா? என்கிறார்கள். வேறு வழியில்லாமல் தங்கமயில் உண்மையை சொல்லி விடுகிறார். உடனே தங்கமயில் அம்மா, தயவு செய்து என் மகளின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள். உண்மையை சொல்லாதீர்கள் என்று சொன்னவுடன் அதிர்ச்சியில் இருவருமே நிற்கிறார்கள்.






