விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, அரசி இனி கல்லூரிக்கு போகக்கூடாது. படிக்கவே தேவை இல்லை என்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். மூன்று மருமகள்கள் எடுத்து சொல்லியுமே கோமதி கேட்கவே இல்லை. அந்த சமயம் பார்த்து பாண்டியன், பழனி இருவரும் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். அப்போது பாண்டியன், அரசிக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன். என்னுடைய அக்கா மகன்தான். நாளை பெண் பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்காகி இருந்தார்கள்.

கோமதி, திருமணமே செய்து வைத்துவிடலாம் என்று சொன்னார். பாண்டியன், அரசி இடம் திருமணத்தை பற்றி பேசி இருந்தார். அரசி, நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். எனக்கு திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்கு பின் அரசி தனியாக வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது சுகன்யா, நீ ஏன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாய்? குமாரின் காதலை மறந்து விட்டாயா? என்றெல்லாம் அரசியின் மனதை மாற்றும் அளவிற்கு பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அரசி வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை எல்லாம் கேட்ட மீனா கோபப்பட்டு சுகன்யா இடம் சண்டைக்கு போனார். அப்போது மீனா, நீங்கள் எதற்கு தேவையில்லாமல் அரசி மனதை சலவை செய்ய பார்க்கிறீர்கள். நீங்கள் தான் அரசியல் காதலுக்கு சப்போர்ட் செய்தீர்களா? என்றெல்லாம் கேட்க, சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் மீனா, தயவு செய்து நீங்கள் அரசி விஷயத்தில் ஒதுங்கியிருங்கள் என்று அரசியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டார். அதற்குப்பின் சுகன்யா, சக்திவேல் வீட்டிற்கு சென்று பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்து என்ன செய்வது என்று மூவருமே பேசிக்கொண்டு இருப்பதை கேட்டவுடன் ராஜி அம்மா, கோபப்பட்டு சுகன்யாவை திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் அரசி நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை பார்த்து கோமதி வருத்தத்துடன் கதிரிடம் புலம்பி கொண்டிருந்தார். பாண்டியனுமே தன் மகளை நினைத்து வருத்தப்பட்டார். இதை எல்லாம் கதிர், ராஜிடம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். இன்னொரு பக்கம் பழனி தன் அண்ணன் வீட்டில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சத்தத்தை கேட்டு சுகன்யா கோபப்பட்டு பழனியை எழுப்பி திட்டி இருந்தார். பழனியும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார். பின் சுகன்யா, வெளியே போய் தூங்குங்கள். இங்கு நான் தூங்கணும் என்று அனுப்பி விட்டார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் ராஜியின் அம்மா வடிவு, பழனி வெளியே தூங்கி இருப்பதை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியா இருந்தார். அதற்குப்பின் சுகன்யா, பழனியை எழுப்பி இருந்தார். அவர் எழவில்லை என்றவுடன் மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் ஓரமாக நின்று வடிவு பார்த்து விட்டார். பின் அந்த சமயம் பார்த்து அப்பத்தா வந்தவுடன் சுகன்யா நடித்தார். வெளியில் பழனி தூங்கியதற்கு ஏதேதோ காரணத்தை சொல்லி சுகன்யா தப்பித்தார். ஆனால், வடிவிற்கு பயங்கர கோபம் வந்தது. உண்மை தெரிந்திருக்குமோ என்று சுகன்யா பார்த்தார்.
https://www.youtube.com/watch?v=xD4LmaEm6oY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமாவில் அரசியை கல்லூரிக்கு செந்திலை கல்லூரிக்கு செந்திலை அழைத்து செல்ல சொல்கிறார் கோமதி. ஆனால், சுகன்யா நான் அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறாய். இதனால் மீனாவிற்கு சந்தேகமாக இருக்கிறது. பின் கல்லூரியில் அரசியிடம் பேச வைப்பதற்கு சுகன்யா ஏற்பாடு செய்கிறார். நம்பிக்கை இல்லாமல் மீனா, செந்திலை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு போகிறார். அப்போது குமார், அரசியிடம் பேசுவதை பார்த்து செந்தில் கோபப்பட்டு குமாரை அடிக்கிறார். அதற்குப்பின் மீனா, இதெல்லாம் உங்கள் வேலையா? நீங்கள் தானே குமாரை வரவைத்தீர்கள் என்று சுகன்யாவிடம் கேட்க, அவரால் எதுவுமே பேச முடியவில்லை.






