விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அப்பத்தா, குமார்- அரசி இருவரையும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சொன்னார்கள். வீட்டுக்குள் சென்றவுடன் முத்துவேல், குமார் திருமணம் செய்து கொண்டதை பற்றி விசாரிக்க, சக்திவேல் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். குமார் உண்மையை சொல்ல வந்தார். ஆனால், குமாரை பேசவிடாமல் முத்துவேல் தடுத்தார். உடனே அரசி, தாலி கட்டும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பயப்படுகிறீர்கள் என்று இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோவை அரசி காண்பித்தார். இதை பார்த்துடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. குமாருக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அதிர்ச்சியில் இருந்தார்.

பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரொம்ப வேதனையில் இருந்தார்கள். பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். கோமதி கோபப்பட்டு தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன் மளிகை சென்று அரசி சொன்னதைப் பற்றி எல்லாம் நினைத்து கொண்டு இருந்தார்கள். கடைக்கு வந்தவர்கள் எல்லோருமே அரசி திருமணத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் முத்துவேல், அரசியை திருமணம் செய்து வந்ததை பற்றி சந்தோஷமாக குமாரை பாராட்டி பேசி இருந்தார். குமார் உள்ளுக்குள், நான் திருமணம் செய்யவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அரசி இடம் ராஜியின் அம்மா, மாரி, அப்பத்தா மூவருமே திருமணத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் கேட்டார்கள். ஆனால், அரசி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். குமாரை பார்த்து எல்லோருமே, எதற்காக இப்படி செய்தாய்? உன்னால் இரண்டு குடும்பமும் வேதனையில் இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அரசி, அவர்தான் வீட்டில் சம்மதம் சொல்வது போல் நடித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இன்னும் குமார் மீது வீண்பழியை போட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் மன வேதனையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

கடந்த வாரம் எபிசோட்:
அதைப் பார்த்து கோமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாமியை கண்ட மேணிக்கு திட்டி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலைகுலைந்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியை குமாரின் அறைக்கு கொண்டு அழைத்துப் போனார். அப்போது குமார், நான் உன்னை திருமணமே செய்யவில்லை. எதற்காக இப்படி பொய் சொன்னாய்? உன்னையும் உன்னுடைய குடும்பத்தையும் அசிங்கப்படுத்த தான் நான் நினைத்தேன். ஆனால், நீ எனக்கு மேல ஒரு திட்டம் போடுகிறாயா? உண்மையை சொல் என்று மிரட்டினார். ஆனால், அரசி அதை கண்டு கொள்ளாமல் தூங்கப் போனார். குமார் கோபமாக அரசி கையை பிடிக்க, குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து அரசி, உண்மையை நீ போய் எல்லோரிடமும் சொல் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, அரசி செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே புலம்பி கொண்டு இருக்கிறார். பாண்டியனால் வீட்டில் யாரிடம் பேச முடியவில்லை. பின் அவர் கடைக்கு கிளம்பும்போது வீட்டில் உள்ள எல்லோருமே வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஆனால், பாண்டியன் யார் பேச்சையும் கேட்கவில்லை, கடைக்கு கிளம்பி விடுகிறார். பாண்டியன் வீடு இழவு வீடாகவே இருக்கிறது. ஒவ்வொருவருமே எதையோ பறிகொடுத்தது போல தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பழனியை அழைத்து மீனா பேசுகிறார். அப்போது மீனா, எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அரசியை எப்படியாவது மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு வாருங்கள்.

சீரியல் ட்ராக்:
அவளிடம் உண்மையை கேட்க வேண்டும் என்று சொல்கிறார். பழனி, அதெல்லாம் எதற்கு மீனா. அவள் துரோகி என்றெல்லாம் அரசியை திட்டுகிறார். மீனா, நீங்கள் கண்டிப்பாக அரசியை அழைத்து வாருங்கள் என்று சொல்கிறார். பழனியும் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் குமார் அரசி, தன்னை மிரட்டியதை நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார். பின் அரசி வைத்திருந்த கத்தியை கையில் குமார் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து அரசி வெளியே வருகிறார். குமார் அந்த கத்தியை காண்பித்து அரசியிடம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






