விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன் சொன்னதை நினைத்து தங்கமயில் ரொம்பவே கஷ்டப்பட்டார். உடனே தங்கமயில், நீ கிளம்பு நாம் எதுவாக இருந்தாலும் சம்மந்தியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பாண்டியன் வீட்டிற்கு சென்றார்கள். அப்போது தங்கமயில் அம்மா, இந்த வீட்டிற்கு வாரிசு வரப்போகிறது. தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னார். இதை கேட்டவுடன் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் சரவணனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார்கள். ஆனால், சரவணன் அதை எதையுமே நம்பவில்லை.

பின் தனியாக ரூமிற்கு சென்று தங்கமயில் இடம் சரவணன், இதுவும் டிராமாவா? என் குடும்பத்தையே பொய் சொல்லி ஏமாற்றுகிறாயா? என்று சொன்னார். உடனே தங்கமயில், டெஸ்ட் பண்ண கிட்டை காண்பித்தார். அதை சரவணன், ஏதாவது ஸ்கெட்ச் வச்சு கோடு போட்டாரா என்று அலைத்துப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு ரொம்பவே கஷ்டமானது. பின் சரவணன், உண்மையாலுமே தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து அவரை சமாதானம் செய்தார். இருவருமே அப்பா- அம்மா ஆன சந்தோஷத்தில் இருந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்வீட் எடுத்து கொண்டாடினார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் தங்கமயில்- சரவணன் இருவருமே ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்கமயில், உங்களுக்கு அப்பாவானது சந்தோசமாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு சரவணன், அப்பா ஆனதை நினைத்தால் எல்லோரும் சந்தோஷம்தான். இருந்தாலும் நீ சொல்வதில் எனக்கு சந்தேகம் தான் வந்தது. என்னால் முன்பு போல் உன்னிடம் பழக முடியாது. என்னுடைய குழந்தைக்கு அப்பாவாக, குழந்தையின் அம்மாவிற்கும் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாப்பேன். ஆனால், பழையபடி நான் உன்னிடம் இருப்பேன் என்று மட்டும் நினைக்காதே. மீண்டும் நீ பொய் சொன்ன விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக உன்னை விட்டு நான் பிரிந்து விடுவேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ராஜி, எதற்காக அரசியை கஷ்டப்படுத்துகிறார்? நானும் அந்த வீட்டில் வாழ்கிறேன். கொஞ்சம் கூட உனக்கு அக்கறை இல்லையா? என்று கேட்டார். குமார், ராஜியை திட்டி விட்டு அரசியை கஷ்டப்படுத்தினால் தான் பாண்டியன் குடும்பம் கஷ்டப்படும் என்று சொன்னார். இதனால் ராஜிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் ராஜி, தன்னுடைய அப்பாவை சந்தித்து குமார் செய்த விஷயத்தை பற்றி சொன்னார். ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. உடனே ராஜி, அரசி வாழ்க்கையில் பிரச்சனை என்றால் என்னுடைய வாழ்க்கையிலும் தான் பிரச்சனை வரும். யோசித்து முடிவெடுங்கள் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமாரிடம் அரசி, என்னிடம் போடுவதற்கு துணிகள் இல்லை. ஷாப்பிங் பண்ணனும் என்று சொல்கிறார். அதற்கு குமார் முடியாது என்று திட்டி விட்டு வந்து விடுகிறார். அதற்குப்பின் முத்துவேலிடம் அரசி, எனக்கு துணி எடுக்கணும். குமாரை அழைத்துப் போக சொல்லுங்கள் என்று சொல்கிறார். உடனே முத்துவேல், அந்தப் பொண்ணு கேட்பதையெல்லாம் வாங்கி கொடு என்று சொல்கிறார். இதை பார்த்த சக்திவேல் சந்தேகப்பட்டு குமாரிடம் விசாரிக்கிறார். அப்போது குமார், ராஜி சொன்னதை சொல்கிறார். அதற்கு சக்திவேல், நீ என்ன வேணாலும் செய். எல்லார் கண்ணிலும் ரத்தம் தான் வரவேண்டும் என்று தன் மகனை ஏத்தி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்துவேல்- சக்திவேல் இருவருமே ரோட்டில் நடந்து கொண்டு நடந்து வருகிறார்கள். அப்போது எதிரே வந்த பாண்டியனை பார்த்த முத்துவேல், உங்களுடைய மகளுக்கு எந்த பிரச்சனையும் எங்கள் வீட்டில் இல்லை. என்னுடைய மகளுக்கும் பிரச்சினை வராது என நினைக்கிறேன் என்று சூசகமாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்று விடுகிறார். இதை பார்த்த சக்திவேலுக்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனுக்கு பார்த்து பார்த்து சமைத்து பரிமாறுகிறார். இருந்தாலுமே சரவணன் அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. கடைசியில் குமார், திட்டிக்கொண்டே அரசியை அழைத்துக் கொண்டு துணி கடைக்கு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






