விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் முத்துவேல், சக்திவேலிடம் சண்டைக்கு போக, அப்பத்தா தடுத்து நிறுத்தி விட்டார். இன்னொரு பக்கம் ராஜி, தான் செய்து தவருக்காக மன்னிப்பு கேட்டார். இதையெல்லாம் வழக்கம்போல் தங்கமயில் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த கோமதி, நாங்கள் எதார்த்தமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சமாளித்தார். அதற்குப்பின் ராஜி- கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போ ராஜி, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். உடனே கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.

பாண்டியன், கதிர் செய்ததை நினைத்து பெருமையாக கோமதியிடம் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜியின் அம்மா வடிவு, ராஜி சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது ராஜியின் அப்பா, அவரை சமாதானம் செய்தார். இருந்தாலுமே கேட்காமல் வடிவு, நம்மால் தான் ராஜி வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவளுக்கு பிடிக்காமல் கல்யாண ஏற்பாடு செய்யாமல் இருந்தால் என் மகள் வீட்டை விட்டு சென்றிருக்க மாட்டார். தற்கொலை முடிவு எடுத்திருக்க மாட்டாள் என்றெல்லாம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். அதற்கு பின் கதிர், ராஜியை வீட்டிற்கு அழைத்து வர போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் தன் தந்தையிடம் ராஜி, கதிர் எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார். என்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார்கள். தயவுசெய்து என்னை பழிவாங்கும் எண்ணத்தை விடுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு ராஜியின் அப்பா எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால், ராஜி பேசுவதை பார்த்த சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், லோன் விஷயமாக பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது கதிர், நான் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்துவேல், தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சக்திவேல், ராஜி உடன் பேசியதைப் பற்றி வீட்டில் சொன்னார். ஆனால், முத்துவேல் எதுவுமே பேசவில்லை. பின் சக்திவேல், உங்கள் மருமகனையும் மகளையும் வரவைத்து தலவாழை இலை போட்டு சாப்பாடு போட்டு பரிமாறுங்கள். ஆனால், என் மகன் மற்றும் ஜெயிலில் கஷ்டப்பட்டு இருக்கட்டும் என்று கத்தி இருந்தார். அதற்கு முத்துவேல் திட்டிவிட்டு சென்றார். பின் குமார் அம்மா, சக்திவேலுக்கு சப்போர்ட் செய்து வடிவையும் அப்பத்தாவையும் திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி சோகமாகவே வீட்டில் இருப்பதால் கோமதி அவரை அழைத்துக் கொண்டு வெளியே போகிறார். வெளியே போகும்போது எல்லோருமே அரசியின் திருமணத்தைப் பற்றியும், அவள் வீட்டை விட்டு ஓடிப் போனதை பற்றியும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசி ரொம்பவே மனமடைந்து விடுகிறார். பின் கோபத்தில் கோமதி, அரசியை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கே வந்து விடுகிறார். பின் வீட்டில் வெளியில் நடந்ததை சொல்லி, சுகன்யாவிடம் உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று சொல்கிறார் கோமதி.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சுகன்யா வெளியில் சோகமாக இருக்கிறார். அப்போது சுகன்யா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தங்கமயிலிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த
பாண்டியன் இடம் கோமதி நடந்ததை எல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார். உடனே பாண்டியன், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்கிறார். பின் சிறிது நேரம் கழித்து பாண்டியன், அரசியை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார். அப்போது வெளியே மைக் செட் பொருத்தப்பட்ட ஆட்டோ இருக்கிறது. அதை பார்த்து கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது






