விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி டியூஷன் எடுப்பதற்கு பாண்டியன் சம்மதம் கொடுத்து விட்டார். இதனால் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் கோமதி, மீனா மூலம் கோயில் பிரசாதத்தை கொண்டு போய் தன் அம்மாவுக்கு கொடுத்தார். இதை அறிந்த கோமதியின் அண்ணன், பாண்டியன் இடம் வம்பிழுக்க, அதற்கு அவரும் பதிலடி கொடுத்து இருந்தார். பின் மீனா, செந்தில் தேர்வு எழுதும் விஷயத்தை சொன்னவுடன் முதலில் பாண்டியன் ஷாக்காகி அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார்.
பின் ராஜி-கதிர் இருவருமே டியூசன் போகும்போது அவருடைய சித்தப்பா ரொம்ப கேவலமாக கதிரையும், அவருடைய குடும்பத்தையும் பேச, ராஜி கோபம் வந்து திட்டி இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தப்பா, அவருடைய அண்ணனிடம் கோபப்பட்டு ராஜியை திட்டி பேச, அவர் தன் தம்பியை திட்டி அடித்து விட்டு சென்றார். இதனால் அவருக்கு இன்னும் கோபம் வருகிறது. நேற்று எபிசோட்டில் செந்தில்- மீனா இருவருமே அரசாங்க வேலை, தேர்வு பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தேர்வு எழுத புது சட்டை வாங்க வேண்டும் என்று மீனா சொல்ல, செந்தில் ஒத்துக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் கடையில் தன்னுடைய அப்பாவிடம் புது சட்டை வாங்குவதற்கு செந்தில் பணம் கேட்டார். ஆனால், அவர் முடியாது. இருக்கும் சட்டையை எடுத்துப் போடு என்று சொல்லிவிட்டு சென்றார். செந்திலுமே கோபப்பட்டு புலம்பி கொண்டு என்ன செய்வது? என்று புரியாமல் இருந்தார். இன்னொரு பக்கம் மீனா தொடர்ந்து செந்திலுக்கு போன் செய்து கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் டியூஷன் எடுக்கும் இடத்திற்கு போன கதிரை பார்த்த ராஜி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு அவருடன் வீட்டிற்கு வந்தார். பின் மீனா, செந்திலுக்கு போன் செய்த போது பாண்டியன் சொன்ன விஷயத்தை பற்றி பழனி சொல்லி விட்டார்.
நேற்று எபிசோட்:
பின் கதிர் உடன் மீனா துணி வாங்க கடைக்கு போனார் . அங்கு செந்திலுக்காக எல்லா சட்டைகளையும் மீனா பார்க்கிறார். ஆனால், அவருக்கு பிடிக்கவே இல்லை. இதை பார்த்து கதிருக்கு தலை சுத்துகிறது. நேற்று எபிசோட்டில் செந்திலுக்காக சட்டையை ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருந்தார் மீனா. இருந்தாலுமே அவருக்கு பிடிக்கவில்லை. பின் நேரம் ஆகிறது என்பதால் ராஜிக்கு போன் செய்து, ஏதாவது சொல்லி சமாளி என்றார் மீனா. இன்னொரு பக்கம் சக்தி அப்பா, தன் அண்ணன் அடித்ததை நினைத்து தன் மகனிடம் புலம்பி கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
மேலும், பாண்டியன் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த மீனா, லேட்டாக வந்ததற்கு ஏதோ காரணம் சொல்லி சமாளித்தார். உடனே கதிர், செந்தில் அண்ணனுக்கு சட்டை வாங்கியது பற்றி சொன்னவுடன் பாண்டியன் கோபப்பட்டார். எதற்கு வீண் செலவு? என்றவுடன் மீனாவும் ஏதோ சொல்லி இருந்தார். இருந்தாலுமே பாண்டியன் கோபப்பட்டார். பின் சட்டையின் விலை 2000 என்று தெரிந்தவுடன் இன்னும் அதிகமாக கோபப்பட, மீனா அமைதியாகவே அங்கிருந்து கிளம்பி விட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செந்தில், அரசாங்கத் தேர்வு எழுதுவதற்காக பாண்டியன் – கோமதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது அவர், படித்திருந்தால் தான் பாஸ் ஆக முடியும் என்று நக்கலாக பேச, மீனாவின் முகவும் மாறுகிறது. பின் பாண்டியன், மீனாவின் அப்பாவை பார்த்து என் மகன் அரசாங்க வேலைக்கு தேர்வு எழுகிறான். கண்டிப்பாக அவன் பாஸாகி விடுவான். அதற்கு பின் நீங்கள் மீனா மற்றும் செந்திலிடம் பேச தான் போகிறீர்கள் என்று சவால் விடுகிறார். இதை கேட்டு பழனி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் தேர்வறையில் செந்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். மீனா அவருக்காக வெளியில் காத்துக் கொண்டு இருக்கிறார்.