விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோமதி, இவர்கள் சொல்வது உண்மையா அரசி? என்று கேட்டார். சுகன்யா, இவர்கள் என் மீது வீண்பழி போட்டார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சமாளித்தார். உடனே அரசி, அண்ணி சொன்னது தான் உண்மை. அத்தையால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்தது என்று சொன்னார். கொந்தளித்த கோமதி, சுகன்யா கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தார். சுகன்யாவால் எதுவுமே பேச முடியவில்லை. கோமதி, என் குடும்பம் உனக்கு என்ன துரோகம் செய்தது.

உனக்கு நாங்கள் நல்லது தானே நினைத்தோம் என்று மீண்டும் அடித்தார். அதற்குப்பின் பாண்டியன், பழனி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பழனி, அவளை கல்யாணம் செய்து கொண்டு வந்த நாளிலிருந்து இப்படித்தான் நடந்து கொண்டார். என்னிடம் எப்போதுமே சண்டை வாங்கிக் கொண்டுதான் இருந்தார். இரவு முழுவதும் என்னை தூங்க விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது என்று புலம்பினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் கதிர், செந்தில் இருவருமே குமார் மீது பயங்கரமாக கோவப்பட்டு பேசி இருந்தார்கள். அதற்கு பாண்டியன், நான் போலீசில் சொல்கிறேன். குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்வதால் கதிர் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற பழனி இடம் சுகன்யா வேண்டும் என்று வம்பு இழுத்தார். இதனால் கோபப்பட்ட பழனி, என்னை பற்றி தான் எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. இனிமேல் என்னை பயமுறுத்தும் வேலை வைத்துக் கொள்ளாதே. உன்னை திருமணம் செய்த நாளில் இருந்து இப்போது வரை நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.

நேற்று எபிசோட்:
என்னை கஷ்டப்படுத்தினால் தாங்கி கொள்வேன். ஆனால், என் குடும்பத்திற்கு ஒன்று என்றால் தாங்கி கொள்ளமாட்டேன். உனக்கு இங்க பிடிக்கவில்லை என்றால் இந்த வீட்டை விட்டு கிளம்பு என்று சுகன்யாவை எதிர்த்து பேசி இருந்தார். அதற்குப்பின் பாண்டியன், சுகன்யாவை அழைத்து பேச, கோமதிக்கு இன்னும் கோவம் அதிகமானது. அப்போது பாண்டியன், இனிமேல் இந்த வீட்டில் நீ எந்த தவறும் செய்யக்கூடாது. இந்த வீட்டிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அதேபோல் கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்தான். ஆனால், பழனிக்கு நீ கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்தது தான் தீர வேண்டும் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், செந்தில், மீனா, ராஜி நான்கு பேருமே குமார் செய்த வேலையை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயம் வந்த குமார் வேணும் என்று கதிர்,செந்திலை வம்பு இழுத்தார். இதனால் ஆத்திரம் தாங்காமல் கதிர்,செந்தில் இருவருமே கதிரை அடிக்கப் போகிறார்கள். உடனே மீனா, ராஜி அவர்களை தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். அதற்கு பின் பாண்டியன், குமார் செய்த வேலைக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பெண் பிள்ளை பெற்றவர்கள் எல்லோருக்குமே இது பாடமாக இருக்கும் என்று சொல்லி அரசியை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:
போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன், தன் மகளை கடத்தி வைத்து குமார் செய்த வேலையை பற்றி எல்லாம் சொல்கிறார். பின் அரசியுமே நடந்த உண்மை எல்லாம் சொல்கிறார். அதனால் போலீஸ், குமார் மீது கம்ப்ளைன்ட் எடுத்துக் கொள்கிறார்கள். பின் போலீஸ், குமாரின் வீட்டிற்கு சென்று பாண்டியன் குடும்பத்தார் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனால் குமாரின் அம்மா, அப்பா, பெரியப்பா எல்லாருமே தடுக்கிறார்கள். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. பின் குமார் தப்பித்து ஓடும்போது போலீஸ் பிடித்து விடுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.






