விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி, குமார் செய்த கேவலமான வேலையை பாண்டியனிடம் சொல்ல பார்த்தார். ஆனால், அவரால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை. அதற்கு பின் அரசிக்கு போன் செய்த குமார், நீ வெளியே வரவேண்டும். நான் சொல்வதை எல்லாம் நீ கேட்க வேண்டும். இல்லையென்றால், உன் போட்டோவை ஊர் முழுக்க ஒட்டுவேன் என்று மிரட்டி இருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் அரசியும் வெளியே வந்தார். ஆனால், வெளியில் அவருடைய அண்ணன்கள் இருப்பதை பார்த்து அமைதியாக விட்டார். குமாரும் உள்ளே சென்று விட்டார்.

அப்போது அவருடைய அண்ணன்கள் கல்யாணத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக அரசி இடம் பேசி இருந்தார்கள். அரசி தன்னுடைய அண்ணன்களிடமாவது உண்மையை சொல்லலாம் என்று நினைத்தார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்ததால் அமைதியாகிவிட்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சரவணன் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். இதனால் வேதனையில் தங்கமயில் அழுது புலம்பி இருந்தார். அதற்குப் பின் அரசி, குமார் செய்த வேலையை நினைத்து அழுது புலம்பி இருந்தார். அப்போது கோமதி, என்ன ஆச்சு? என்ன நடந்தது? என்று கேட்டார். கடைசி வரை உண்மையை சொல்லாமல் அரசி ஏதோ சமாளித்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் அரசி- குமார் போட்டோவை பாண்டியன் வீட்டிற்கு வெளியே ஒட்டி இருந்தார்கள். இதை பார்த்தவுடன் பாண்டியன் குடும்பம் மொத்தமாக அழுது கொண்டிருந்தது. அதற்கு பின்பு தான் அது அரசி கண்ட கனவு என்பது என்று தெரிந்தது. அதற்கு பின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. எல்லோரும் வீட்டில் மெகந்தி வைத்துக் கொண்டு சந்தோசமாக திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது குமார், கோமதி மொபைலுக்கு கால் செய்து வேறொருவர் பேசியது போல் அரசி இடம் பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
அப்போது குமார், இந்த திருமணம் நடக்காது. உன் அப்பா தேவையில்லாமல் கடன் வாங்கி இதெல்லாம் செய்தார். நான் சொல்வதைக் கேட்டால் உன்னுடைய மானம் போகாது என்றெல்லாம் பேசி மிரட்டி இருந்தார். அரசிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்ப பயந்தார். மறுநாள் காலையில் எல்லோருமே நலங்கு வைப்பதற்கு தயாராக இருந்தார்கள். அப்போது ராஜி, கதிருகாக மேட்சிங் உடையை எடுத்துக் கொடுத்தார். ஆனால், கதிர் போட மாட்டேன் என்று சொன்னதால் ராஜி வருத்தப்பட்டு சென்று விட்டார். அதற்குப்பின் கோமதி, தன்னுடைய மருமகளிடம் கழுத்து நிறைய நகைகளை போட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் தங்கமயில் பயந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா- ராஜி இருவருமே உங்களுடைய நகைப் பற்றி வெளியே தெரியாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பயப்படாதீர்கள் என்று தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். தங்கமயில் நகைக்களை எடுத்து பார்த்தால் எல்லாமே கருகி போயிருக்கிறது. உடனே மீனா, யாருக்கும் தெரியாமல் ஒளித்து வையுங்கள். அத்தையிடம் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிறார். அப்போது வந்த செந்திலின் உடையை பார்த்து ராஜி ஆச்சரியப்படுகிறார். மீனா- செந்தில் இருவருமே மேட்சிங் உடைய போட்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். உடனே மீனா, கதிரும் உனக்கு மேட்சிங்கா ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா? என்று கேட்டவுடன் ராஜி கோபப்பட்டு கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதை வெளியே இருந்த கதிர் கேட்டு விடுகிறார். அதற்குப்பின் ராஜிக்காக அவர் தன்னுடைய சட்டையை மாற்றிக் கொண்டு வந்து விடுகிறார். அதை பார்த்ததும் ராஜிக்கு ஒரே குஷி. பின் மாப்பிள்ளை வீட்டில் வந்து விடுகிறார்கள். நலங்கு பங்க்ஷன் நடக்கிறது. குமார் ஏதாவது பிரச்சனை செய்வாரா? என்று ஒரு அரசி பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது குமார், சுகன்யாவுக்கு போன் மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் சுகன்யாவும் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






