விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் வடிவு, ராஜி-அரசி வாழ்க்கையில் நடந்தது எல்லாமே ஒன்று தான். அரசியே தாலி கட்டிக் கொண்டாள். ஆனால், ராஜிக்கு கதிர் தாலி கட்டினார். இருந்தாலும் விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம். ராஜியை நம்ம வீட்டிற்க்கே அழைத்து வந்துவிடலாம் என்று சொன்னார். இதைக்கேட்டு முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் ராஜி, மீனா, தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தங்கமயில், அரசி வீட்டிற்கு வந்த மாதிரியே ராஜியும் அவள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவாளா? என்று கேட்டவுடன் ராஜி பயங்கரமாக கோபப்பட்டு உள்ளே சென்று விட்டார்.

பின் கோமதி, ராஜி எதற்கு அம்மா வீட்டிற்கு போகவேண்டும் என்று தங்கமயிலை திட்டி விட்டார்.
அதற்குப்பின் ரூமில் ராஜி, வெளியில் நடந்ததை கதிரிடம் சொல்லி ஃபீல் பண்ணி பேசி இருந்தார். உடனே கதிர், உனக்கு உன் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் என்றால் சொல் நானே கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னார். இதனால் ராஜிக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதற்குப்பின் ஜாமினில் வெளியே குமார் வந்ததை பார்த்த சரவணன், தன்னுடைய அப்பாவிடம் சொன்னார். பின் வடிவு, நாங்கள் ராஜியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர இருக்கிறோம் என்று சொன்னார். இதனால் குமார் ஷாக் ஆனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜியின் திருமணத்தைப் பற்றி வடிவு, குமாரிடம் சொன்னார். அதற்குப்பின் முத்துவேல், வடிவு இருவருமே அரசியை அழைத்து போவதற்காக பாண்டியன் வீட்டிற்கு வெளியே வந்து கூப்பிட்டார்கள். சந்தோஷத்தில் ராஜி, தன்னுடைய அம்மாவை உள்ளே கூப்பிட்டார். அதற்கு வடிவு, உனக்கு விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடந்தது. உன்னை எங்களுடன் அழைத்து செல்ல வந்தேன். நம்முடைய வீட்டிற்கே வந்துவிடு என்று சொன்னார். இதனால் ராஜியால் எதுவுமே பேச முடியவில்லை. இது எல்லாம் கேட்டு கோமதி. மீனா எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். பின் பாண்டியனும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் ராஜி, கதிரிடம் கேட்டார். அதற்கு கதிர், உன்னுடைய விருப்பம் என்று சொன்னார். அதற்குப்பின் வெளியே வந்த ராஜி, இது எனக்கு விருப்பம் இல்லாமல் நடந்த கல்யாணம்தான். இருந்தாலும் கதிர் என்னை முறைப்படி கல்யாணம் செய்து கொண்டார். எங்களுடைய திருமணமும் ரிஜிஸ்டர் செய்திருக்கிறது. என்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார்கள். என்னால் வர முடியாது என்று சொன்னார். இதை கேட்டு கோமதி-மீனா சந்தோசப்பட்டார்கள். வடிவு- முத்துவேல் இருவருமே ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, கதிர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறான். என்னுடைய கனவு எல்லாம் நிறைவேற்றுகிறான். நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு வடிவு-முத்துவேல்எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள. ராஜி பேசியதை கேட்டு பாண்டியன் குடும்பமே சந்தோஷப்படுகிறது. கதிர் சந்தோஷத்தில் யாருக்கும் தெரியாமல் ரூமுக்குள் நடனமாடுகிறார். இதை பார்த்த மீனா சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மீனா, ராஜி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, கதிர் தனக்காக எதுவும் பேசவில்லை என்று வருத்தப்படுகிறார். உடனே ராஜி, கதிர் ரொம்ப சந்தோஷப்பட்டான். அவனுக்கும் உள்ளுக்குள் உன் மீது பாசம் இருக்கிறது என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்துவேல் வீட்டில் எல்லோருமே ராஜி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சக்திவேல், ராஜி அங்கு இருப்பது நமக்கு அசிங்கம். அவளை கட்டாயப்படுத்தியாவது இந்த வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்றெல்லாம் பேசுகிறார். இதைக் கேட்ட முத்துவேல், அவளுக்கு வர விருப்பம் இல்லை. இந்த விஷயத்தை இதோடு விடுங்கள். ராஜி அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். இதனால் சக்திவேல் பயங்கரமாக கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், ராஜி பேசியதை பாராட்டி பேசுகிறார். பின் பாண்டியன், குமார் மீது கொடுத்த கேஸ் கோர்ட்டுக்கு வருவதால் அரசி அழைத்து வர சொல்கிறார். அதனால் நாளை கோர்ட்டுக்கு போகலாம் என்று சொல்கிறார். இதை கேட்டு கோமதி பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






