விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில், சரவணன்- கதிர்-பழனியை வீட்டிற்கு வர வைத்திருந்தார். கோமதி எதற்காக வந்தீர்கள்? எதற்காக செந்தில் வரச்சொன்னார்? என்று கேட்டார். அவர்கள் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்து பாண்டியன், எல்லோரும் வீட்டில் இருப்பதை பார்த்து ஏன்? என்ன ப்ரச்சனை என்று கேட்டார். அந்த சமயம் பார்த்து ஸ்வீட்டோடு மீனா-செந்தில் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். தனக்கு கிடைத்த ஆர்டரை பாண்டியனிடம் கொடுத்தார். அவர் சரவணனிடம் படிக்க சொன்னார். சரவணன், அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.

பின் செந்திலுக்கு கவர்மெண்டில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் மொத்த விடுமே சந்தோஷப்படுகிறது. ஸ்வீட் எடுத்து கொண்டாடி இருந்தார்கள். அப்போது செந்தில், இதற்கெல்லாம் காரணம் மீனாவும் அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று சொன்னார். பின் செந்தில் மளிகை கடை வேலைக்கு போவதில்லை. அப்போது பாண்டியன், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருந்தார். அங்கு வந்த சரவணன், இனி நான் கடைக்கு வருகிறேன். நான் செய்யும் வேலையை விட்டு விடுகிறேன் என்றார். அதற்குப்பின் செந்தில்- கதிர்- ராஜி- மீனா பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், டிராவல்ஸ் ஏஜென்சி ஆரம்பிக்க போகிறேன். அதற்கான ஏற்பாடுகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசொட்டில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தங்கமயிலின் அம்மா, நீ எப்படியாவது மாப்பிளையை உன் கைக்குள் கொண்டு வா. மற்றபடி எல்லாம் தானாக நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்துவிட்டார். சரவணன் இடம் ரொம்ப பாசமாக தங்கமயில் பேசி இருந்தார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்குப்பின் பாண்டியன் வீட்டிற்கு மீனாவின் அப்பா, அம்மா இருவருமே வந்தார்கள். அப்போது மீனாவின் அப்பா, நானே மாப்பிள்ளைக்கு பணத்தை கொடுத்து வேலை வாங்கித் தரணும் என்று நினைத்தேன்.

நேற்று எபிசோட்:
நீங்கள் உங்கள் மகனுக்காக 10 லட்சம் ரூபாய் கொடுத்து வேலை வாங்கித் தந்தது பெரிய விஷயம் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பாண்டியனுக்கு ஷாக் ஆகிறது. பின் மீனாவின் அப்பா சென்ற பிறகு பாண்டியன், பணம் கொடுத்து தான் இந்த வேலையை வாங்கினாயா? யாரிடம் பணம் வாங்கினாய்? என்று கேட்டார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபப்பட்ட பாண்டியன், செந்திலை அடிக்க போனார். உடனே மீனா, நான்தான் லோன் போட்டு பணம் வாங்கித் தந்தேன் என்று சொன்னார். பாண்டியன், அந்த அளவிற்கு நீங்கள் பெரிய மனுஷர்களாகி விட்டீர்களா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல தோணவில்லையா? என்றார். அதற்கு மீனா, அரசி பிரச்சனையால் தான் சொல்ல முடியவில்லை என்றார். இருந்தாலுமே பாண்டியன் அவர்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருவரையும் திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தா, அரசிக்காக நகைகளை கொடுக்கிறார். அதற்கு அரசி, எனக்கு நகையே பிடிக்காது. நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என்று அப்பத்தாவுக்கு போட்டு விடுகிறார். அந்த சமயம் பார்த்து பழனி வீட்டிற்கு வருகிறார். அரசி, பழனியிடம் தன் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். ஆனால், பழனி அரிசியின் மீது இருந்த கோபத்தில் ஒழுங்காக பேசவே இல்லை. அப்பத்தாவிடம் மட்டும் செந்திலுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்திருக்கிற விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் தன்னுடைய அண்ணன்கள் வந்தவுடன் பழனி அங்கிருந்து சென்று விடுகிறார். அப்போது முத்துவேல், குமாருக்காக பார்த்த பெண் வீட்டார் போன் செய்வதால் குமார் திருமணம் ஆன விஷயத்தை சொல்லி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதை அறிந்த சக்திவேல், பணக்கார வீடு போய்விட்டதே என்று குமாரை புலம்பி திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த செந்தில்- மீனா இருவருமே நார்மலாக எல்லோரிடம் பேசுகிறார்கள். ஆனால், யாருமே சரியாக பேசவில்லை.
மீனா, பாண்டியனிடம் பேசுகிறார். ஆனால், பாண்டியன் எதுவுமே கண்டுக்கொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் கதிர் ஜாலியாக பேச, அதற்கு செந்திலுமே பதில் கொடுக்கிறார். இவர்கள் எல்லோரும் பேசுவதை பார்த்து பாண்டியன் கடுப்பாகி சாப்பிடுவதை விட்டு சென்று விடுகிறார். இதனால் கோமதி கோபப்பட்டு திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






