விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா- செந்தில் இருவருமே பணத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது செந்தில், வேலை கிடைத்த உடனே நான் உண்மையை அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். அதற்கு மீனா, எனக்கு ஏதோ பிரச்சனையில் மாட்டியது போலவே தோன்றுகிறது என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அரசிக்கு மாப்பிள்ளை பார்த்த வீட்டில் இருந்து அவருடைய அம்மா- அப்பா வருகிறார்கள். அவர்கள் சரியாக முகம் கொடுத்து கூட பாண்டியனிடம் பேசவில்லை. கேவலமாக பாண்டியன் குடும்பத்தை பற்றி பேசி இருந்தார்கள்.

பின் அவர்கள், இந்த திருமணத்திற்காக நாங்கள் பத்து லட்சம் செலவு செய்து இருக்கிறோம். நீங்கள் தான் கொடுக்கணும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோமதி, பாண்டியன் ஷாக் ஆனார்கள். மற்றவர்கள் எடுத்துச் சொல்லியுமே மாப்பிள்ளையின் அம்மா, அப்பா இருவரும் கேட்கவில்லை. எங்கள் பணத்தை எடுத்து வையுங்கள் என்று ரொம்ப காரராக பேசி இருந்தார்கள். அதனால் பாண்டியன், நான் பணத்தை சீக்கிரமாகவே கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பின் பாண்டியன், செந்திலிடம் பணத்தை பேங்கில் இருந்து எடுத்து வர சொன்னார். மீனா- செந்தில் இருவருக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை. பயத்தில் செந்தில் புலம்பி கொண்டிருந்தார். பின் கடையில் செந்தில்- கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் செந்தில், அப்பா கொடுத்த பணத்தை கொண்டு போய் மீனா அப்பாவிடம் கவர்மெண்ட் வேலைக்காக கொடுத்து விட்டேன். பணம் பேங்கில் போடவில்லை என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கதிர் ஷாக் ஆனார். செந்தில், என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்பாவிடம் நான் மாட்டிக் கொண்டேன் என்று ரொம்பவே பதறினார். உடனே கதிர், ஏதாவது செய்யலாம் தைரியமா இருங்கள். நாம் அத்தை இடம் பேசலாம் என்று இருவருமே மாப்பிள்ளையின் அம்மாவிடம் பேச போனார்கள். ஆனால், அவர்கள் வீட்டில் இல்லை. உடனே கதிர் போன் செய்து பேசி இருந்தார். ஆனால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் திட்டி போனை வைத்து விட்டார். இதனால் செந்திலுக்கு இன்னும் பயம் அதிகமானது.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் போன் செந்திலுக்கு போன் செய்த மீனா, உங்கள் அத்தை ஒத்துக் கொள்வார் என்று எப்படி நினைத்தீர்கள். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டீர்கள். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னார். பின் பாண்டியனும் செந்திலுக்கு போன் செய்தார். அப்போது பாண்டியன், பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சீக்கிரம் வா என்று சொன்னார். உண்மையை சொல்ல முடியாமல் கதிர்- செந்தில் இருவருமே தவித்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணனை பார்க்க அவர் வேலை செய்யும் இடத்திற்கு போனார். சரவணன், எதற்காக இங்கே வந்தாய்? வீட்டிற்கு கிளம்பு என்று சொன்னார். தங்கமயில், எனக்கு அல்வா சாப்பிட வேண்டும் என்று இருந்தது. எனக்கு நீங்களே வந்து வாங்கி கொடுங்கள் என்று சொன்னார். சரவணன் வேறு வழியில்லாமல் அமைதியாக கிளம்பி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், பணத்திற்கு என்ன செய்வதென்று புரியாமல் தனது தெரிந்தவர்கள் எல்லாரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய நண்பர்களிடம் பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், யாருமே இல்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசி தன்னுடைய அம்மாவிடம் பேச வருகிறார். அப்போது கோமதி கையில் இருந்த தண்ணீரை அரிசி முகத்தில் வீசி திட்டி விட்டு உள்ளே செல்கிறார். இதை பார்த்த அப்பத்தா, அரிசிக்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், செந்திலுக்கு போன் செய்து வரவைற்கிறார்.

சீரியல் ட்ராக்:
செந்தில்- கதிர் இருவருமே என்ன சொல்வது என்று புரியாமல் பயந்து கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அந்த சமயம் பார்த்து பணத்தை வாங்குவதற்கு மாப்பிள்ளை அம்மா, அப்பா இருவருமே வருகிறார்கள். அப்போது பாண்டியன், பணம் எங்கே? என்று கேட்கிறார். செந்தில்- கதிர் இருவருமே மாற்றி மாற்றி ஏதேதோ சொல்கிறார்கள். வீட்டில் உள்ள யாருக்குமே புரியவில்லை. கோபத்தில் பாண்டியன், பணத்தை என்னதான் செய்தீர்கள்? என்று கேட்கிறார். உடனே மீனா, பணத்தை நான் தான் பேங்கில் இருந்து எடுத்து வந்தேன் என்று 10 லட்சம் ரூபாய் பணத்தை பாண்டியனிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை பாண்டியன் மாப்பிள்ளை வீட்டில் கொடுக்கிறார். அவர்களுமே எதுவும் பேசாமல் பணத்தை வாங்கி கொண்டு சென்று விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






