விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், சவாரியில் அழைத்து சென்ற பெண்ணிடம் அவர் நண்பர்கள் தவறாக கண்ணோட்டத்தில் பார்த்ததால் அந்த பெண் ரொம்ப பயந்தார். உடனே கதிர், அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி அவர்களிடம் இருந்து காப்பாற்றி வீட்டில் விட்டார். அதன் பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு கதிர்-ராஜி போனார்கள். அங்கு கண்ணனை பார்த்தவுடன் கோபத்தில் ராஜி அவரை அடித்தார். பின் கதிர், கண்ணன் மீது புகார் கொடுத்து இருந்தார். இந்த வாரம் பாண்டியன் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை கதிர் கடத்தி விட்டான் என்று சொல்லி தரதரவென இழுத்துச் சென்றது.

வீட்டில் உள்ள எல்லோரும் எடுத்து சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. இதனால் பாண்டியன் குடும்பம் உடைந்து போய் இருக்கிறது. பின் பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விசாரித்தார். அப்போது கதிர், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார். ஆனால், அதை போலீஸ் கேட்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன் குடும்பத்தை வெளியே அனுப்பியதால் என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமே பரிதவித்து இருந்தது. பின் போலீஸ், கதிரை உண்மையை சொல்லு என்று அடி அடி என்று வெளுத்து வாங்கி இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கதிர் எவ்வளவு சொல்லியுமே அவருடைய பேச்சைக் கேட்கவே இல்லை. கதிரை பயங்கரமாக துன்புறுத்தி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி கொண்டிருக்க, மீனா- தங்கமயில் ஆறுதல் சொல்லி இருந்தார்கள். ராஜி, தன்னுடைய கணவர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் வெளியே வருவார் என்று தைரியமாக இருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வெளியே ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே பாண்டியனின் குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இதனால் ஆத்திரத்தில் பாண்டியன் அவர்களிடம் சண்டைக்கு போக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பயங்கர தகராறு நடந்தது. நேற்று எபிசோட்டில் ராஜி, எனக்கு கல்யாணம் எப்படி நடந்தது என்று தெரியுமா? என உண்மை சொல்ல பார்த்தார். உடனே மீனா, தடுத்து விட்டார். பின் கோமதி தன்னுடைய அண்ணன்கள் இடம் ரொம்ப எமோஷனலாக தன்னுடைய மகனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர்கள் எதுக்குமே மனம் இறங்கவில்லை. கடைசியில் பாண்டியன், என் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வெளியே கூட்டி விடுவேன் என்று சவால் விட்டார்.

சீரியல் ட்ராக்:
பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு பாண்டியன், வக்கீலை அழைத்து கொண்டு போனார். அங்கு கதிரை பார்த்து பாண்டியன் ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார். பின் வக்கீல், போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ராஜியின் சித்தப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது அவர், பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேச, சரவணன் சண்டைக்கு போனார். இதனால் போலீஸ், பாண்டியன் குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டது. இதற்கிடையில் கதிர், நீங்கள் அந்த பெண்ணை கண்டுபிடித்தால் தான் நான் வெளியே வருவேன் என்று செந்தில் இடம் ஐடியா கொடுத்தார்.
https://www.youtube.com/watch?v=1Cg8ssqnVVs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ராஜி வருகிறார். அப்போது போலீஸ், நீ பெரிய குடும்பத்து பெண்ணாக இருந்து எதற்காக இவனை நம்பி போனாய். இவன் ரொம்ப மோசமானவன் என்று கதிரை சொல்கிறார். உடனே ராஜி, அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் எந்த பெண்ணையும் கடத்தவில்லை என்று கதிருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அந்த சமயம் பார்த்து செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த பெண், என்னை இவனுங்க தான் கடத்தி வைத்ததாக சொன்னவுடன் போலீஸ் கதிரை விடுகிறது. பாண்டியன் கோபத்தில் போலீசை திட்டுகிறார்.






