விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, பாண்டியனிடம் டியூஷன் எடுக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல, வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசவில்லை. ராஜி தன் தரப்பு நியாயத்தை சொல்லியும் பாண்டியன் எதுவுமே பேசாமல் சென்று விட்டார். வீட்டில் உள்ளவர்களும் என்ன சொல்லுவாரு? என்ற பயத்தில் இருந்தார்கள். கதிர், ராஜி பேசியது சரி என்று பாராட்டி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், ராஜி சொன்னதை நினைத்து எல்லோரிடம் பெருமையாக பேசி இருந்தார்.

பின் வீட்டில் எல்லோரும் பாண்டியன் என்ன முடிவு எடுப்பாரோ? என்ற பதட்டத்திலேயே இருந்தார்கள்.
அப்போது வந்த பாண்டியன், ராஜி டியூஷன் எடுப்பதற்கு சம்மதம் கொடுக்க, எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் பாண்டியன், வீட்டிற்கு அழைத்து வந்து டியூஷன் எடுக்க கூடாது, தாமதமாக வரக்கூடாது, படிப்பையும் விடாமல் செய்யணும் என்று கண்டிஷன் போட, ராஜி ஒத்துக் கொண்டார். பின் ராஜி- கதிர் இருவரும் டியூசனுக்கு சம்மதம் கிடைத்தது நினைத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில், பாண்டியன் எடுத்த முடிவை நினைத்து செந்தில்- மீனா இருவருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். அப்போது பாண்டியன் தன்னையும் வேலைக்கு போக சொன்னதை சொல்ல, அவர் அதிர்ச்சியாகி ஏதோ சொல்லி சமாளி என்றார். அந்த சமயம் வந்த சரவணன், நீ வேலைக்கு போ என்பர் சொல்ல, தங்கமயில் முடியாது என்றார்.

நேற்று எபிசோட்:
மறுநாள் காலையில் ராஜி -மீனா இருவரும் சந்தோஷமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமதி, கோயிலில் இருந்து வந்தார். தன்னுடைய அம்மா எதிரில் இருப்பதை பார்த்த கோமதி, மீனா மூலம் பிரசாதம் கொண்டு போய் கொடுத்தார். இதை அறிந்த கோமதியின் அண்ணன், அவரின் அம்மாவை திட்டி கத்து இருந்தார். இதை பார்த்த பாண்டியனும் அவருக்கு பதிலடி கொடுத்து இருந்தார். இதையெல்லாம் பார்த்து ராஜி, கோமதி இருவருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராஜி, டியூசன் கிளம்ப போகிறேன் என்று சொன்னவுடன் பாண்டியன், தனியாக வேண்டாம். கதிரை அழைத்துக் கொண்டு போக என்கிறார். அப்படியே மீனா, செந்தில் தேர்வு எழுதும் விஷயத்தை சொன்னவுடன் முதலில் பாண்டியனுக்கு ஷாக் ஆனார். பின் ஒழுங்காக எழுது என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார். எல்லோரும் வேலைக்கு போவதை பற்றி வீட்டில் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயிலையும் பாண்டியன் வேலைக்கு போக சொல்கிறார். உடனே அவர் ஏதேதோ சொல்லி சமாளித்து அமைதியாகி இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் ராஜி-கதிர் இருவருமே சைக்கிளில் போகும்போது அவருடைய சித்தப்பா ரொம்ப கேவலமாக கதிரையும், அவருடைய குடும்பத்தையும் பேச, ராஜி கோபம் வந்து திட்டுகிறார். பின் உங்களைப்போல் வட்டிக்கு விட்டு யாரும் பிழைக்கவில்லை. சொந்தமாக சம்பாதித்து வாழ்கிறோம் என்று தன்னுடைய மாமனார் குடும்பத்தை பெருமையாக பேசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தப்பா, அவருடைய அண்ணனிடம் பயங்கரமாக கோபப்பட்டு ராஜியை திட்டி பேசுகிறார். உடனே அவர், தன் தம்பியைவே திட்டி விட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






