விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, எனக்காகவும் நம்முடைய குடும்பத்தின் மானத்திற்காகவும் தான் கதிர் திருமணம் செய்து கொண்டார். மற்றபடி கதிரும் நானும் காதலிக்கவில்லை. கல்யாணத்திற்கு முன்னாடி வரை எனக்கு கதிரை பிடிக்கவே பிடிக்காது. இதுதான் உண்மையான சத்தியம் என்று சொன்னார். இதை கேட்டவுடன் பாண்டியனும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். பின் ராஜியும் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார்.

சக்திவேல், ராஜி சொன்னதை நம்புகிறீர்களா? அவள் சொல்வதெல்லாம் பொய் என்று சொன்னார். அந்த சமயம் வந்த பழனி, ராஜி சொன்னது தான் உண்மை. ராஜி காதலித்த விஷயம் எனக்கு தெரியும். கல்யாணத்திற்கு முன்பு அவள் வீட்டை விட்டு ஓடுவாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கதிர்- ராஜி இருவரும் திருமணம் செய்து கொண்டது எனக்கு அதிர்ச்சி தான் என்று சொன்னார். உடனே சக்திவேல், எல்லோரும் சேர்ந்து கதை கட்டுகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது என் பையன் தான் என்று ராஜியை பற்றி ரொம்ப மோசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதனால் கோபப்பட்ட முத்துவேல், சக்திவேலிடம் சண்டைக்கு போக, அப்பத்தா தடுத்து நிறுத்தி விட்டார். இன்னொரு பக்கம் ராஜி, தான் செய்து தவருக்காக மன்னிப்பு கேட்டார். இதையெல்லாம் வழக்கம்போல் தங்கமயில் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த கோமதி, நாங்கள் எதார்த்தமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சமாளித்தார். அதற்குப்பின் ராஜி- கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போ ராஜி, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். உடனே கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பாண்டியன், கதிர் செய்ததை நினைத்து பெருமையாக கோமதியிடம் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜியின் அம்மா வடிவு, ராஜி சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது ராஜியின் அப்பா, அவரை சமாதானம் செய்தார். இருந்தாலுமே கேட்காமல் வடிவு, நம்மால் தான் ராஜி வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவளுக்கு பிடிக்காமல் கல்யாண ஏற்பாடு செய்யாமல் இருந்தால் என் மகள் வீட்டை விட்டு சென்றிருக்க மாட்டார். தற்கொலை முடிவு எடுத்திருக்க மாட்டாள். ஒருவேளை என் மகள் இறந்து இருந்தால் நானும் இறந்திருப்பேன் என்றெல்லாம் ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். அதற்கு பின் கதிர், ராஜியை வீட்டிற்கு அழைத்து வர போனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன் தந்தையிடம் ராஜி, கதிர் எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார். என்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார்கள். தயவுசெய்து என்னை பழிவாங்கும் எண்ணத்தை விடுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு ராஜியின் அப்பா எதுவும் பேசாமல் இருக்கிறார். ஆனால், ராஜி பேசுவதை பார்த்த சக்திவேல் பயங்கரமாக கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், லோன் விஷயமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது கதிர், நான் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் முத்துவேல், தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த சக்திவேல், ராஜி உடன் பேசியதைப் பற்றி வீட்டில் சொல்கிறார். ஆனால், முத்துவேல் எதுவுமே பேசவில்லை. பின் சக்திவேல், உங்கள் மருமகனையும் மகளையும் வரவைத்து தலவாழை இலை போட்டு சாப்பாடு போட்டு பரிமாறுங்கள். ஆனால், என் மகன் மற்றும் ஜெயிலில் கஷ்டப்பட்டு இருக்கட்டும் என்று கத்துகிறார். அதற்கு முத்துவேல் திட்டிவிட்டு செல்கிறார். பின் குமார் அம்மா, சக்திவேலுக்கு சப்போர்ட் செய்து வடிவையும் அப்பத்தாவையும் திட்டி விட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






