விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், கதிர் இருவருமே காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், இந்த டிராவல்ஸ் தொழில் உனக்கு தெரியுமா? இதில் ஏதாவது நஷ்டம் அடைந்தால் நீ சமாளிப்பாயா? இந்த லோன் விவகாரம் எல்லாம் கொஞ்சம் பயமாக இருக்கிறது. உனக்கு அந்த அளவுக்கு திறமை இருக்கிறதா? இந்த தொழில் வேண்டாம் நீ மேற்கொண்டு படித்துவிட்டு வேலைக்கு போ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். கதிர், நானே என் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதால் கோபப்பட்டு பாண்டியன் காரில் இருந்து இறங்கினார்.

இன்னொரு பக்கம் கோமதி இடமும் சுகன்யாவை பற்றி பழனி சொன்னார். இதை கேட்டவுடன் கோமதி இன்னும் கொந்தளித்து சுகன்யாவை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், கதிர் செய்ததைப் பற்றி கோமதியிடம் சொன்னார். இதை கேட்ட கோமதி கோபப்பட்டு கதிரை திட்டிக் கொண்டிருந்தார். ராஜி எடுத்து சொல்லியும் கோமதி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு கதிர் வந்தார். கதிரை பார்த்தவுடன் கோமதி கோபப்படாமல் அன்பாக விசாரித்தார். அதற்குப்பின் கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் சரவணன், அரசி இருவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை கிச்சனிலிருந்து பார்த்த தங்கமயில் பொறாமைப்பட்டார். அந்த சமயம் பார்த்து மீனாவும், சரவணன் இடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், ராஜி நீ ஐபிஎஸ் ஆகிவிடு. உனக்கு என்ன தோணுதோ அதை செய் என்று சொன்னார். பின் மீனாவிடம், லோனை உன்னால் அடைக்க முடியுமா? என்று கேட்க, அதற்கு செந்தில், நான் லோன் பிரச்சனையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
அதோடு அரசியிடம் பாண்டியன், உன்னுடைய மீனா- ராஜி மாதிரி பேரும் புகழும் வாங்கணும் என்று புகழ்ந்து பேசி இருந்தார். இதை எல்லாம் கேட்டு தங்க மயிலுக்கு பயங்கரமாக கடுப்பாக இருந்தது. பின் ரூமுக்கு வந்த தங்கமயில், எப்ப பாத்தாலும் மீனா- ராஜியை தான் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று கோபப்பட்டு புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்தார். சரவணனை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று தங்கமயில் கால் வலிப்பது போல் நடித்து டிராமா செய்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி, என்னுடைய நகைகளை விற்று கதிரின் தொழிலுக்குகொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றார். அதற்கு மீனாவுமே சரி என்கிறார். பின் மீனாவுக்கு வேலை வந்ததால் கிளம்பிவிட்டார். பின் ராஜி பேங்கில் நகையை கொடுத்துவிட்டு வைப்பதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு வந்த சக்திவேல் ராஜியை பார்த்து விடுகிறார். பேங்கில் இருபவர்களிடம் எதற்காக ராஜி வந்தார் என்ற விஷயத்தை விசாரித்து சக்திவேல் தெரிந்து கொள்கிறார். உடனே சக்திவேல் அங்கு வேலை செய்பவர்களிடம், பணத்தை பிறகு தருகிறேன் என்று சொல்லி அனுப்புங்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதையும் நம்பி ராஜி சென்று விடுகிறார். பின் கோபத்தில் அந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சக்திவேல் நடந்த எல்லாத்தையும் தன்னுடைய அண்ணன் இடம் சொல்கிறார். பின் ராஜி நகையை விற்க வந்த விஷயத்தை வீட்டிற்கு வெளியே வந்து சக்திவேல் பாண்டியனையும் அவர் குடும்பத்தையும் வெளியே வர சொல்லி கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர்-ராஜி இருவரும் வெளி வருகிறார்கள். சக்திவேல் நகை விஷயத்தை தான் பேச வந்திருக்கிறார் என்று ராஜி தெரிந்து கொள்கிறார். இதனால் இவர் மீனாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். பாண்டியன் வருவதற்காக சக்திவேல் காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






