விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் மகன்கள் எல்லோருமே என்ன பிரச்சனை? எதற்காக இப்படி தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்துவிட்டார். அப்போது சக்திவேல், நகை திருட்டுப் போய்விட்டது. நகை கிடைத்த உடனே திரும்பி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கள் வீட்டு பொண்ணை ஏமாற்றி அவளை அனுப்பி நகையை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். இதைக் கேட்டு பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ராஜி, இதற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தான் கதிர் பிசினஸ்க்காக நகையை வைக்கப் போனேன்.

நகை கிடைத்த விஷயம் கூட வீட்டில் யாருக்கும் தெரியாது என்று சொன்னார். இருந்தாலுமே, சக்திவேல் குடும்பத்தில் யாருமே நம்பவில்லை. பின் சக்திவேல், கதிரை ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட ராஜி, என்னுடைய திருமணத்தால் ஒரு விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக பொய் மேல் பொய் சொல்லியும் இருக்கிறேன். என்னுடைய திருமணத்தில் நடந்த விஷயத்தை தெரிந்தால் இப்படி எல்லாம் நீங்கள் பேச மாட்டீர்கள். உங்கள் மானம் கௌரவத்தை கதிர் தான் காத்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார். ராஜி உண்மையை சொல்லி விடுவாளோ என்று கோமதி, மீனா இருவருமே பதறினார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் ராஜி, உண்மையாலுமே நான் காதலித்தது வேறு ஒருவரை, கதிர் கிடையாது. நான் திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்தேன். நீங்கள் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்ததால் நான் அந்த நபருடன் வீட்டை விட்டு போய்விட்டேன். ஆனால், போன பிறகு தான் அந்த ஆள் மோசமானவன் என்று தெரிந்தது. அவன் என்னை ஏமாற்றி நகைகளை எல்லாம் எடுத்துவிட்டு ஓடிவிட்டான். எனக்கு அப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. செத்துப் போய்விடலாம் என்று நினைத்தேன். அந்த சமயம் தான் திருச்சிக்கு கதிர் வந்திருந்தார். கதிர், என்னிடம் நடந்ததை பற்றி கேட்க, எல்லாத்தையும் நான் சொன்னேன். அதற்கு பின் என்னை வீட்டில் விடுவதாக சொன்னார். நான் தான் உங்கள் மீது இருந்த பயத்தில் வரவில்லை.

நேற்று எபிசோட்:
பின் கதிரிடம் நான்தான் என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டேன். எனக்காகவும் நம்முடைய குடும்பத்தின் மானத்திற்காகவும் தான் கதிர் திருமணம் செய்து கொண்டார். மற்றபடி கதிரும் நானும் காதலிக்கவில்லை. கல்யாணத்திற்கு முன்னாடி வரை எனக்கு கதிரை பிடிக்கவே பிடிக்காது. இதுதான் உண்மையான சத்தியம் என்று சொன்னார். இதை கேட்டவுடன் பாண்டியனும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். பின் ராஜியும் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் கோமதி, மீனா இருவருமே தங்களுடைய பெயர் வெளியில் வரவில்லை என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சக்திவேல் வீட்டில் எல்லோருமே ராஜி சொன்னதை நினைத்து யோசித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சக்திவேல், இதை நம்புகிறீர்களா? அவள் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்கிறார். அந்த சமயம் வந்த பழனி, ராஜி சொன்னது தான் உண்மை. ராஜி காதலித்த விஷயம் எனக்கு தெரியும். அதை நான் வீட்டில் சொல்லவில்லை. கல்யாணத்திற்கு முன்பு அவள் வீட்டை விட்டு ஓடுவாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டதே கிடையாது. ஆனால், இருவரும் திருமணம் செய்து கொண்டது எனக்கு அதிர்ச்சி தான் என்று சொல்கிறார். உடனே சக்திவேல், எல்லோரும் சேர்ந்து கட்டுக்கதை கட்டுகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது என் பையன் தான் என்று ராஜியை பற்றி ரொம்ப மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபப்பட்ட முத்துவேல், சக்திவேலிடம் சண்டைக்கு போகிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆகிறது. உடனே அப்பத்தா தடுத்து நிறுத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் கோமதி, மீனா, ராஜி முவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி, தான் செய்து தவருக்காக மன்னிப்பு கேட்கிறார். அதற்கு கோமதி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் வழக்கம்போல் தங்கமயில் ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கோமதி, நாங்கள் எதார்த்தமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சமாளிக்கிறார். அதற்குப்பின் ராஜி- கதிர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போ ராஜி, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். உடனே கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






