விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கோர்ட்டில் குமாரின் கேஸ் நடக்க இருப்பதால் அரசியை அழைத்து போகணும் என்று கோமதி ரொம்பவே மனமடைந்து வேதனையில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதிக்கு ஆறுதல் செய்தும் அவர் கேட்கவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே அரசிக்கு துணையாக பேசி இருந்தார். அதற்கு அரசி, நானே பார்த்துக்கொள்கிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை என்று தைரியமாக பேசினார். இன்னொரு பக்கம் முத்துவேல் குடும்பத்தில் எல்லோருமே குமார் மீண்டும் ஜெயிலுக்குப் போய் விடுவானா? என்று வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார்கள்.

சக்திவேல் வழக்கம் போல் தன் அண்ணனையும், ராஜியையும் ஏளனமாக பேசிக் கொண்டிருக்க, கோபத்தில் முத்துவேல் திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியனை சந்தித்த அப்பத்தா, தயவு செய்து கேசை வாபஸ் வாங்கி விடுங்கள். வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கிறது என்று சொன்னார். அதற்கு பாண்டியன், என் மகன் தவறு செய்திருந்தாலும் நான் தண்டனை தான் வாங்கிக் கொடுப்பேன். குமாருக்கு நீங்கள் புத்திமதி சொல்லி வளர்த்திருக்கணும். இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், அரசியை கோர்ட்டுக்கு கிளம்ப சொன்னார். பின் கோமதி கோர்ட்டுக்கு போனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமார்- அரசி கேஸ் நடந்தது. கோமதி, யாராவது என்ன சொல்வார்களோ? என்ற பயத்தில் புலம்பிக்கொண்டே இருந்தார். பின் கோர்ட்டில் குமாரை விசாரித்தார்கள். அதற்குப்பின் அரசியையும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு விசாரித்தார்கள். இதை எல்லாம் பார்த்து கோமதி ரொம்ப பதறினார். அதற்குப்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். பின் வீட்டில் கோர்ட்டில் நடந்ததை பற்றியெல்லாம் விசாரித்தார்கள். கோமதி, பாண்டியன் சொன்னார்கள். அதற்குப்பின் கதிரிடம் பாண்டியன், பேங்கிற்கு போய் கையெழுத்து போடுகிறேன். லோன் எடுத்துக் கொள் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பின் பாண்டியன், நான் லோன் வாங்கி தருவேன். உன்னுடைய விருப்பத்திற்கு எல்லாம் ஆட முடியாது என்று கண்டிஷன் போட்டார். இதைக் கேட்டு கோபப்பட்ட கதிர் தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் கதிர், அப்பா எனக்கு எந்த உதவியும் செய்ய தேவையில்லை. நீங்களே சொல்லிடுங்க என்றார். உடனே கோமதி, நீங்கள் எந்த கையெழுத்தும் போட்டு தர தேவையில்லை. அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொன்னார். பாண்டியனும் கோபத்தில் திட்டி விட்டு சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர், சரவணன், செந்தில் மூவருமே கடையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாண்டியன், என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு சரவணன், சும்மா என்று சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் சரவணன், தங்கமயிலுக்கு கிப்ட் வாங்குவதற்காக பணம் கேட்கிறார். பாண்டியனுமே எதுவும் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறார். உடனே சரவணன் அந்த பணத்தை வைத்து தங்கமயிலுக்காக ஒரு நல்ல புடவையை வாங்கிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் தங்களுடைய அன்னிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக செந்தில்,கதிர் இருவருமே கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் தங்கமயிலுக்கு சப்ரைஸ் கொடுக்க வீட்டை அலங்காரம் செய்து வைக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த பாண்டியன்,எதற்காக இந்த அலங்காரம்? என்று கேட்கிறார். தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் இப்படி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். பின் கோயிலில் இருந்து கோமதி, தங்கமயில் இருவருமே வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது மீனா, உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சரவணன் மாமா இதை செய்தார் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் தங்கமயிலை பிடிக்க முடியவில்லை. அதற்குப்பின் சரவணன் தான் வாங்கிய கிப்ட்டை தங்கமயிலுக்கு கொடுக்கிறார். அந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






